தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி?

விழிப்புணர்வு கூட்டம
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு கூட்டம

விழிப்புணர்வு

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி சென்னையில் அக்டோபர் 15, சனிக்கிழமை மாலையிலும், புதுச்சேரியில் அக்டோபர் 16, ஞாயிற்றுக் கிழமை காலையிலும் நடந்தது.

சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலில் பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டுக் கல்விப் பிரிவு பிராந்திய தலைவர் எஸ்.குருராஜ், ‘‘எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் பாதுகாப்பு, எளிதில் பண மாக்குதல், சிறந்த வருமானம், வருமான வரி அனுகூலம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தரும் ஒரே சொத்துப் பிரிவு ஈக்விட்டி ஆகும். ரூ.5,000 முதலீட்டில் 50-க்கும் மேற் பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஈக்விட்டி ஃபண்ட் மூலம் இருக்கிறது.

விழிப்புணர்வு கூட்டம
விழிப்புணர்வு கூட்டம

டாப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட கடந்த 3, 5, 10, 15 ஆண்டு களில் தொடர்ந்து பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் ஃபண்டு களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்’’ என்றார்.

புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் பேசிய குருராஜ், ‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால நோக்கில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அப்போது அவர்கள் எடுக்கும் ரிஸ்க் கானது காலப்போக்கில் ஏற்ற, இறக்கம் அடைந்து, பண வீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைக் கொடுக்கும்’’ என்றார்.

அடுத்து நிதி ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும். காரணம், அதிகம் சம்பளம் வாங்கும் இளைஞர் கள் தொடர்ந்து செலவு செய்வது மற்றும் உள்நாட்டு நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதாகும்.

தற்போதைய நிலையில், இந்தியப் பங்குச் சந்தை அதிக மதிப்பீட்டிலும் இல்லை; குறைவான மதிப்பீட்டிலும் இல்லை. சந்தை நன்றாக இருக்கும்பட்சத்தில் அதை நல்ல முதலீட்டு வாய்ப் பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘‘டாலர் மதிப்பு வெகுவாக அதிகரித்துவிட்டது, விரைவில் பொருளாதார மந்தநிலை வரப்போகிறது என்கிற செய்தியை எல்லாம் பார்த்து முதலீட்டாளர்கள் குழம்ப வேண்டாம். இந்த நிகழ்வுகளால் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பங்குச் சந்தை இவ்வளவு தூரம் கீழே இறங்கும் என்றெல்லாம் யாராலும் துல்லிய மாகச் சொல்ல முடியாது. சந்தை கீழே போனால் முதலீடு செய்ய வேண்டும்; மேலே போனால் முதலீட்டின் ஒரு பகுதியைக் கொஞ்சம் விற்க வேண்டும். இதுதான் வெற்றிகரமான முதலீட்டுக் கான அடிப்படை’’ என்றார்.

சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி?

இந்த இரண்டு கூட்டங்களிலும் சிறப்பு விருந்தின ராக எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், ‘‘ஆட்டோ காரர்களுக்கு 1 கிலோ மீட்டர் என்பது ரொம்ப தூரம், அதுவே ரியல் எஸ்டேட்காரர்களுக்கு 100 கிலோ மீட்டர் என்பது ரொம்ப பக்கம். பொருள்களை வாங்கும்போது பேரம் பேசத் தயங்காதீர்கள். காஷ்மீரில் 1,000 ரூபாய் சொன்ன ஒரு கத்தியை 50 ரூபாய்க்குப் பேரம் பேசி வாங்கியிருக்கிறேன். 10 ரூபாய் சம்பாதித்தால் அதில் 2 ரூபாயை சேமிப்பாக எடுத்து வைத்தே ஆக வேண்டும். பணத்தை நாம் காப்பாற்றினால், அது நம்மைக் காப்பாற்றும்.

சம்பாதிக்கும் பணம் அத்தனையும் செலவுக்கே சரியாகப் போய்விடுகிறது. இனி எப்படி சேமிப்பது என்று கேட்கிறார்கள். எது அவசியம், எது அநாவசியம் என்று நாம் புரிந்து செயல்பட்டால், நம் சம்பாத் தியத்தில் 10% - 20% நம்மால் நிச்சயம் சேமிக்க முடியும்’’ என்றார்.

அடுத்து, முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு வ.நாகப்பன், எஸ். குருராஜ், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் க.சுவாமி நாதன் ஆகியோர் விரிவாகப் பதில் அளித்தார்கள்.

இந்தக் கூட்டங்களுக்குப் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாக இருந்தது!