Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... எட்டாவது இடத்தில் தமிழ்நாடு..! இன்னும் முயற்சி தேவை...

I N V E S T M E N T

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்திருக்கும் தொகை மற்றும் நபர்களின் அடிப்படையின் முதல் இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு சராசரியாக தனிநபர் ஒருவரின் முதலீடு ரூ.1.54 லட்சமாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கோவா (ரூ.1.2 லட்சம்), மகாராஷ்டிரா (ரூ.1.09 லட்சம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தனிநபர் ஒருவர் முதலீடு செய்திருக்கும் தொகை, இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீட்டின் அடிப்படையில் இந்திய அளவில் 18-வது இடத்தில் கோவா இருக்கிறது. அதாவது, தனிப்பட்ட நபர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் மிக அதிக தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்... எட்டாவது இடத்தில் தமிழ்நாடு..! இன்னும் முயற்சி தேவை...

இதற்கடுத்த இடங்களில் கர்நாடகா (ரூ.32,328), குஜராத் (ரூ.31,830), தமிழ்நாடு (ரூ.18,784) ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதாவது, தமிழ்நாடு எட்டாவது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, தமிழ் நாட்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்டில் செய்யப் பட்டிருக்கும் மொத்த முதலீடு குறைவாக இருக்கிறது. கூடவே, முதலீட்டுக் கணக்குகளின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கும் சராசரித் தொகையும் குறைவாக உள்ளது. அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தமிழ்நாடு செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் எனலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு