Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... 2020-ல் 12.5 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

F U N D I N V E S T M E N T - கொரோனாவைத் தாண்டியும் உயர்ந்த முதலீடு...

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பரவல் பாதிப்பையும் தாண்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 12.5 லட்சம் பேர் புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதை அடுத்து மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 2.02 கோடி யிலிருந்து 2.15 கோடியாக அதிகரித்துள்ளது.

கூடவே, மொத்த முதலீட்டுக் கணக்குகளின் (ஃபோலியோ) எண்ணிக்கை 8.71 கோடியிலிருந்து 9.43 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஃபோலியோ கணக்கு ஓராண்டு காலத்தில் சுமார் 72 லட்சம் அதிகரித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

மொத்த முதலீடு, ரூ.26.54 லட்சத்திலிருந்து ரூ.31 லட்சம் கோடியாக (2020 இறுதி நிலவரம்) உயர்ந்திருக்கிறது. சிறு முதலீட்டாளர்களின் முதலீடு 4% அதிகரித்து, ரூ.1.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முதல் 30 பெரிய நகரங்களில் சிறு முதலீட்டாளர்கள் சராசரியாக ரூ.2.28 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அடுத்த 30 நகரங்களை சேர்ந்த சிறு முதலீட்டாளர்களின் சராசரி முதலீடு ரூ.1.04 லட்சமாக இருக்கிறது.