Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டில் அதிகரிக்கும் SIP முதலீட்டாளர்கள்; ஒரே மாதத்தில் ₹11,005 கோடி முதலீடு!

Mutual fund (Representational Image)
News
Mutual fund (Representational Image)

கடந்த நவம்பர் மாத முடிவின் படி, மொத்தம் 4.78 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் இருக்கின்றன. இது நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்தில் 3.80 கோடியாக இருந்தது. ஏழு மாதத்தில் 98 லட்சம் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் முதலீட்டாளர்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அண்மைக் காலங்களாக முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக எஸ்.ஐ.பி (systematic investment plan) திட்டங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ரீடெய்ல் முதலீட்டாளர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், எஸ்.ஐ.பி திட்டங்கள் வாயிலாக ரூ.11,005 கோடியை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது மியூச்சுவல் ஃபண்ட் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச தொகையாகும். கடந்த 2020-ம் ஆண்டின் இதே மாதத்தில் எஸ்.ஐ.பி வாயிலாக மியூச்சுவல் ஃபண்டில் ரூ.7,302 கோடியை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.10,519 கோடியை முதலீடு செய்திருந்தார்கள். அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் ரூ.10,351 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதங்களாக ரீடெய்ல் முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி வாயிலாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரும் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த நவம்பர் மாத முடிவின் படி, மொத்தம் 4.78 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் இருக்கின்றன. இது நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்தில் 3.80 கோடியாக இருந்தது. ஏழு மாதத்தில் 98 லட்சம் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் முதலீட்டாளர்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

தற்போதுள்ள மொத்த எஸ்.ஐ.பி கணக்குகள் வாயிலாக மியூச்சுவல் ஃபண்டில் நிர்வகித்து வரும் தொகையின் மதிப்பு ரூ.5,46,683 கோடியாக இருக்கிறது. இதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் ரூ.77,978 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் அனைத்து மாதங்களும் சேர்த்தே ரூ.96,08 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.