Published:Updated:

ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள்... சில கேள்விகள்... சரியான பதில்கள்..!

ஃபிக்ஸட் இன்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஃபிக்ஸட் இன்கம்

முதலீடு

ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள்... சில கேள்விகள்... சரியான பதில்கள்..!

முதலீடு

Published:Updated:
ஃபிக்ஸட் இன்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஃபிக்ஸட் இன்கம்

ராகவ் ஐயங்கார், தலைமை வணிக அதிகாரி, ஆக்ஸிஸ் ஏஎம்சி

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டுக் கட்டுப்பாட் டாளர்கள் ஆகியோரின் விழிப்புணர்வு முயற்சிகளால் முதலீட்டாளர்கள் முதலீட் டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ராகவ் ஐயங்கார், 
தலைமை வணிக அதிகாரி, 
ஆக்ஸிஸ் ஏஎம்சி
ராகவ் ஐயங்கார், தலைமை வணிக அதிகாரி, ஆக்ஸிஸ் ஏஎம்சி

முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டுக் கலவைகளை (Portfolios) நிர்வகிப்பதில் தீவிர அக்கறை காட்டி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக முதலீட்டு அறிவில் முதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும், சரியான சொத்து ஒதுக்கீடு கலவையைத் தீர்மானிப்பது (Right Asset Allocation Mix), முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

ஃபிக்ஸட் இன்கம் (Fixed Income) திட்டங்களில் முதன் முறையாக முதலீடு செய்பவர் கள் பயப்படுகிறார்கள். காரணம், இந்தச் சொத்துப் பிரிவை சுற்றி எண்ணற்ற தவறான புரிதல்கள் (Myths) இருப்பதாகும். தவிர, சிறு முதலீட்டாளர்களைப் பெரிதும் குழப்பமடையச் செய்வதாகவும் இருக்கிறது.

குறிப்பாக, முதலீட்டு நிபுணர்கள் கால அளவுகள், மகசூல் வளைவுகள், கடன் கொள்கை, பணவீக்கம், நாணயக் கொள்கை மற்றும் ஃபெட் (Durations, Yield Curves, Credit Policy, Inflation, Monetary Policy and the Fed) போன்ற வாசகங்களை அடிக்கடி உச்சரிக்கும்போது சிறு முதலீட்டாளர்கள் உண்மை யிலேயே குழம்பித்தான் போகிறார்கள்.

ஆனால், ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களைப் பார்த்து அப்படி எல்லாம் குழம்பத் தேவையில்லை. ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களின் மூலம் நல்ல வருமானம் தர வைப்பது அந்த ஃபண்ட் மேனேஜரின் வேலையாகும். எனவே, முதலீட்டாளர்கள் அது குறித்து சிறிதும் கவலைப்படத் தேவையில்லை.

நேர்த்தியாகக் கட்டமைக் கப்பட்ட நிலையான வருமான முதலீட்டுக் கலவை, முதலீட்டாளர்களுக்கு மூலதன அதிகரிப்பை (capi tal appreciation) உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

மூலதனப் பாதுகாப்பு, வருமானம் ஈட்டுதல், முதலீட் டுக் கலவையை சமநிலைப் படுத்தும் திறன் மற்றும் பணவீக்க ரிஸ்க்குக்கு எதிராக ஹெட்ஜ் போன்ற பல நன்மை களுடன், நிலையான வருமான முதலீட்டுச் சொத்துப் பிரிவுகள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சந்தைச் சுழற்சிகளைப் பயன் படுத்தி லாபம் ஈட்ட உதவு கின்றன. எனவே, முதலீட் டாளர்கள் இந்த ஃபிக்ஸட் இன்கம் சொத்துப் பிரிவு தொடர்பான சில பொது வான தவறான புரிதல்களை அகற்றி, சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் முதலீட்டின் நோக்கத்தை முழுமை செய்யும்.

ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள்... சில கேள்விகள்... சரியான பதில்கள்..!

ஃபிக்ஸட் இன்கம் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு ஏற்றதா?

விளக்கம்: ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்காது. நிலையான இன்கம் திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக பணப் புழக்கத்தை வழங்குகிறது. மேலும், மூலதனத்தை எளிதாக எடுக்கக்கூடிய குறுகிய கால திட்டங்களில் முதலீடு செய்வதாக ஃபிக்ஸட் இன்கம் திட்டங்கள் உள்ளன.

இந்த முதலீட்டில் கடன் பத்திரங்கள் வெளிப்புற ஏஜென்சிகளால் மதிப்பிடப்படுவதால், முதலீட்டாளர் கள் ரிஸ்க் அளவு குறித்து நியாயமான அனுமானத்தைப் பெற முடியும். இவை குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

வட்டி விகிதங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தால் கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்குமா..?

விளக்கம்: வட்டி விகிதங்கள் மற்றும் பத்திரங்கள் (bonds) நேர்மாறான விகிதாசார உறவைக் கொண்டுள்ளன. அதாவது, வட்டி விகிதம் அதிகரித் தால், பாண்டுகளின் வருமானம் குறையும். வட்டி விகிதம் குறைந்தால், பாண்டுகளின் வருமானம் அதிகரிக்கும். எந்தவொரு எதிர்பாராத மாற்றங் களுக்கும் எதிராகத் தங்கள் முதலீடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பாதுகாப்பதற் காக, முதலீட்டாளர்கள் நிலையான வட்டி விகித பாண்டுகளை வாங்கலாம்.

உண்மையில், குறுகிய கால பாண்ட் ஃபண்டுகள், கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல ஆரம்ப முதலீடாக இருக்கும். உயரும் வட்டி விகித சூழ்நிலையில், இந்தக் குறுகிய கால ஃபண்டுகளில் கடைப்பிடிக்கப்படும் குறுகிய கால உத்தியானது நிலையற்ற தன்மையைக் குறைக்கும் மற்றும் வட்டி வருவாயை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

நிலையான வருமான திட்டங்களில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைவிட மெதுவாகத்தான் பணமாக்க முடியுமா..?

விளக்கம்: முதலீட்டைப் பணமாக்குதல் (Liquidity) என்பது முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாக பணமாக மாற்றுவதைக் குறிக்கும். பொதுவாக, நிறுவனப் பங்குகளை விரைவாக பணமாக மாற்ற முடியும். காரணம், முதலீட் டாளர்கள் அவற்றை பங்குச் சந்தையில் எளிதாக விற்க முடியும்.

ஆனால், பொதுவாக நிலையான வருமான முதலீடுகளை விரைந்து பணமாக்க முடியாது. இப்போது பல கடன் பத்திரங்கள் குறிப்பாக, அரசு வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், அவற்றை விரைந்து விற்று பணமாக்க முடியும்.

வயதுக்கு இணையான சதவிகித தொகையை ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா..?

விளக்கம்: முதலீட்டாளரின் வயது அதிகரிக்கும் போது, அவரின் நிலையான வருமான முதலீடும் அதிகரிக்க வேண்டும் என்பது ஃபிக்ஸட் இன்கம் சொத்துப் பிரிவைப் பற்றிய மிகப் பெரிய தவறான கருத்துகளில் ஒன்றாகும்.

முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டின் நோக்கம், முதலீட்டுத் தொகுப்பு நிதி, முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகளின் அளவு இருக்க வேண்டும்.

ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள்... சில கேள்விகள்... சரியான பதில்கள்..!

அதிக வருமானம் ஈட்ட அதிக ரிஸ்க் எடுக்க வேண்டுமா..?

விளக்கம்: எந்த ஒரு முதலீட்டுத் திட்டமும் வருமான உத்தர வாதத்துடன் வருவதில்லை. நிறுவனத்துக்கு உள்ளே மற்றும் நிறுவனங்களுக்கு வெளியே மற்றும் அரசு சார்ந்த ரிஸ்க்குகள் இருக்கின்றன. முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யும் முன், சிறு முதலீட்டாளர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை அறிந்திருப்பது அவசிய மாகும்.

AA தரக்குறியீடு மற்றும் அதற்கு மேற்பட்ட தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும் வழியாகும். விரும்பிய வருமானத் தைப் பெற இந்த வழியில் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நிலையான வருமான திட்டங் களை ஒரு சொத்துப் பிரிவாகப் புரிந்துகொண்டு, தங்களுக்கு முன் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு இப்போது முதலீட்டாளர்களிடமும் உள்ளது.

ஃபிக்ஸட் இன்கம் திட்டங் களில் முதலீடு செய்வது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்!