Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு மூலம் நிதிச் சுதந்திரம்..!

ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி

முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடு மூலம் நிதிச் சுதந்திரம்..!

முதலீடு

Published:Updated:
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து `எஸ்.ஐ.பி முதலீட்டு முறை... நிதிச் சுதந்திரத்துக்கு வழி..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைகளில் முக்கியமான ஒன்றாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) இருக்கிறது. இதன் மூலம் நிதிச் சுதந்திரத்தை அடையும் வழிகளை இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

ஜீவன் கோஷி
ஜீவன் கோஷி

இதில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி, “கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்டிங் பற்றி அறிந்தவர்கள் சுலபமாக நிதிச் சுதந்திரம் அடைய முடியும். இந்தக் கூட்டு வளர்ச்சி அறிந்தவர்கள் முதலீடு செய்து முன்னேறு கிறார்கள். அறியாதவர்கள் கடன் வாங்கி, வங்கி நிதி நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துத் தருகிறார்கள். ஓய்வுக்காலத்தில் செலவுக்கு மற்றவர்களை நம்பி இருக்காமல் கௌரவமாக இருக்கவும், நிதிச் சுதந்திரத்துடன் இருக்கவும் இளமையிலேயே எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிப்பது அவசியம்’’ என்றார்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி,
ஶ்ரீகாந்த் மீனாட்சி,

நிதி ஆலோசகர் ஶ்ரீகாந்த் மீனாட்சி பேசும்போது, ‘‘நிதிச் சுதந்திரம் அடைவதற்கு இரண்டாவது வருமானம் மிக முக்கியம். இந்த இரண்டாவது வருமானம் என்பது வேலை செய்து வரக்கூடியதாக இருக்கக் கூடாது. முதலீடு, வீட்டு வாடகை போன்ற வற்றின்மூலம் வரும் பேசிவ் இன்கம் ஆக இருக்க வேண்டும். எந்த முதலீடு பணவீக்க விகிதத்தைத் தாண்டி கூடுதலாக ஓரிரு சதவிகிதம் வருமானம் தருகிறதோ, அதை நல்ல முதலீடு என்று சொல்லலாம். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் சரியான முதலீடாக இருக்கும். அதுவும் எஸ்.ஐ.பி முறையில் 20, 25 ஆண்டுகளுக்கு நீண்ட காலத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், நிச்சயம் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்” என்றார்.

முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விரிவாக விளக்கம் அளிக்க நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism