Published:Updated:

2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? எவ்வாறு முதலீடு செய்யலாம்? வழிகாட்டும் நிகழ்ச்சி

சென்செக்ஸ் 2022 | Sensex 2022
News
சென்செக்ஸ் 2022 | Sensex 2022

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. மேலும், ஓமிக்ரான் வேரியன்ட் பாதிப்பு அச்சுறுத்துகிறது. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் மனதில் 2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

கொரோனா பாதிப்பினால் இரண்டு ஆண்டுகள் எப்படி கடந்தது என்றே தெரியாத அளவுக்கு விரைவாக கடந்துவிட்டது. தற்போது 2021-ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம்.

கொரோனாவுக்குப் பின் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் ஏற்றத்தை கண்டுவந்தன. 18 மாதங்கள் வரை நல்ல ஏற்றம் கண்டுவந்த சந்தை, 2021-ன் பிற்பகுதியில் சற்று ஏற்ற இறக்க நிலைக்கு மாறியது. பின்னர், வர்த்தகர்கள் எதிர்பாராத வகையில் இறக்கம் உண்டானது.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (எஃப்ஐஐ) பங்குகளை விற்றுவருகின்றன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. இதன் மதிப்பீடுகளும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன. மேலும், ஓமிக்ரான் வேரியன்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு மறுபக்கம் அச்சுறுத்துகிறது. இத்தகைய சூழலில் 2022 புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் மனதில் 2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிபுணர்களின் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு, நாணயம் விகடன் ஊடக ஆதரவை வழங்குகிறது.

`சென்செக்ஸ் 2022' என்ற தலைப்பில் நடக்க உள்ள இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி நாகராஜன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு சிஐஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன் இருவரும் சிறப்பு உரை ஆற்ற உள்ளனர்.

சென்செக்ஸ் 2022
சென்செக்ஸ் 2022
Sensex 2022

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: events@hindustanchamber.in

தொலைபேசி எண்: 044-2829 4457