Published:Updated:

வாழ்க்கையை வளமாக்கும் 2021-க்கான நிதித் திட்டமிடல்... வழிகாட்டுகிறது நாணயம் விகடன்!

Investment (Representational Image)
Investment (Representational Image)

2020-ம் ஆண்டின் படிப்பினையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட விஷயங்களையொட்டி எடுக்க வேண்டிய நிதித் தீர்மானங்கள் குறித்து விரிவாக இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல், 2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்' என்ற நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜனவரி 10-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.

இதில், பட்டிமன்றம் ராஜா, முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இவர்களுடன் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் முதலீட்டாளர் கல்வி பிரிவு தலைவர் கே.எஸ்.ராவ், முதலீட்டாளர் கல்வி பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்
வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்

முடிந்த 2020-ம் ஆண்டை யாரும் மறக்க மாட்டார்கள். கொரானா வைரஸ் உலகம் முழுக்க பரவி உலக நாடுகளுக்கு பொருளாதார சிக்கலையும், தனிநபர்களுக்கு நிதிச் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற பாதிப்பால் பலரும் தங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), ஆர்.டி முதலீட்டை நிறுத்தினார்கள்.

ஆர்.பி.ஐ கடன் தவணைகளை ஆறு மாதத்துக்கு தள்ளி வைக்கும் சலுகையை அளித்தும் பலரால் மாதத் தவணைகளை கட்ட முடியவில்லை. மேலும், உடல்நலப் பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்த செலவுகள் வேறு. இப்படி 2020-ம் ஆண்டு பல வகைகளிலும் தனி நபர்களின் நிதி ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கிறது.

2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்
2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்

நிதித் தீர்மானங்கள்

2020-ம் ஆண்டின் படிப்பினையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட விஷயங்களையொட்டி எடுக்க வேண்டிய நிதித் தீர்மானங்கள் குறித்து விரிவாக இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மீண்டும் உங்கள் நிதி ஆரோக்கியத்தை சீரமைக்க இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக அமையும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இலவசம்!

ஆனால், முன் பதிவு அவசியம். பதிவு செய்ய: https://bit.ly/2KSw5v3

அடுத்த கட்டுரைக்கு