Published:Updated:

பயமில்லா முதலீடு... கைகொடுக்கும் ஹைபிரிட் ஃபண்டுகள்... வழிகாட்டும் நாணயம் விகடன்!

Mutual funds (Representational Image)
Mutual funds (Representational Image)

பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் காலம், இறக்கத்தில் இருக்கும் காலம் என அனைத்து நிலைகளிலும் ஹைபிரிட் ஃபண்டுகள் ஓரளவுக்கு லாபம் கொடுக்கக்கூடியவை.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, `அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஹைபிரிட் ஃபண்டுகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன.

இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புராடக்ட் ஸ்பெஷலிஸ்ட் (தமிழ்நாடு) எஸ்.ஆர். செந்தில் பாபு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி நவம்பர் 22-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடைபெறும்.

பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் காலம், இறக்கத்தில் இருக்கும் காலம் என அனைத்து நிலைகளிலும் ஹைபிரிட் ஃபண்டுகள் ஓரளவுக்கு லாபம் கொடுக்கக் கூடியவை.

ஹைபிரிட் ஃபண்டுகளில், கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்டுகள், அக்ரெஸிவ் ஹைபிரிட் ஃபண்டுகள், டைனமிக் அஸெட் அலோகேஷன் (பேலன்ஸுடு அட்வான்டேஜ் ஃபண்டுகள்), மல்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள் எனப் பல வகையான ஃபண்டுகள் உள்ளன.

இந்த ஃபண்டுகள் மூலம் என்ன வருமானம் எதிர்பார்க்கலாம். இதில் எந்த ஃபண்ட் யாருக்கு ஏற்றது, எவ்வளவு காலம் முதலீடு செய்யலாம், ஆதாயத்துக்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பது போன்ற விவரங்களை நிபுணர்கள் விளக்கி சொல்கிறார்கள். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள்.

Smart Investor - Hybrid Fund
Smart Investor - Hybrid Fund

கட்டணமில்லா இந்தக் கூட்டத்தில் நீங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளலாம். குறிப்பாக, குடும்பப் பெண்கள், பணிபுரியும் பெண்கள் அவசியம் ஹைபிரிட் ஃபண்டுகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2TRgMUx

அடுத்த கட்டுரைக்கு