மாதம் ₹2,835 முதலீடு செய்ய ரெடியா? நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்... ஈக்விட்டி ஃபண்டுகளின் மேஜிக்!
கூட்டத்தில் பங்கேற்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களும் விடை காணமுடியும்.
நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து `செல்வம் உருவாக்கும்: ஈக்விட்டி ஃபண்டுகள்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, டிசம்பர் 20-ம் தேதி காலை 10.30 - 11.30 மணிக்கு நடத்துகிறது.
ஶ்ரீகாந்த் மீனாட்சி
இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் கிளஸ்டர் மேலாளர் (திருச்சி) ஜி.வினோத் குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் மிக முக்கியமானது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் ஆகும்.

கோடீஸ்வரர்
இந்த ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் ஒருவர் நிச்சயம் செல்வம் (Wealth) சேர்க்க முடியும். ஒருவர் மாதம் ரூ. 2,835 வீதம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால் அவர் கோடீஸ்வரர்தான்.
ஒருவர் கோடீஸ்வரர் ஆவதற்கு ஈக்விட்டி ஃபண்டுகள் கைகொடுக்கும் என்று சொல்லலாம்.
இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் எனப் பல வகைகள் உள்ளன.
முதலீட்டு அனுபவம், ரிஸ்க் எடுக்கும் திறன், பண வசதி, இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றதாக இருக்கும். இந்த வகை ஃபண்டுகளுக்கு வரிச் சலுகை உண்டா, மூலதன ஆதாயத்துக்கு வருமான வரி எப்படி விதிக்கப்படுகிறது என்பது இந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லப்படுகிறது.
சந்தேகங்களுக்கு விடை
கூட்டத்தில் பங்கேற்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விடை காண முடியும்.
அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru