Published:Updated:

என்.ஆர்.ஐ-களே... முதலீடு தொடர்பான விஷயங்களில் குழப்பமா? வழிகாட்டுகிறது நாணயம் விகடன்

என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை
என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை

என்.ஆர்.ஐ-கள் என்பவர்கள் யார், அவர்கள் இரண்டு நாடுகளில் பணிபுரியும் போது கிடைக்கும் வருமானத்துக்கு எப்படி வரி கட்ட வேண்டும், அவர்கள் வருமான வரியை மிச்சப்படுத்த எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துசொல்லப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்.

இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக நாணயம் விகடன், `என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’ என்கிற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறது. என்.ஆர்.ஐ-கள் என்பவர்கள் யார், அவர்கள் இரண்டு நாடுகளில் பணிபுரியும் போது கிடைக்கும் வருமானத்துக்கு எப்படி வரி கட்ட வேண்டும், அவர்கள் வருமான வரியை மிச்சப்படுத்த எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துசொல்லப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பை, என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் எடுக்கிறார். இவர் `ஜி.எஸ்.டி - ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதியிருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக் கால அனுபவம் கொண்டவர்.

என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை
என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை

பயிற்சி வகுப்பு ஜனவரி 30, 2021, இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை (இந்திய நேரப்படி) நடக்கிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கட்டணம் ரூ.900 ஆகும்.

ஜனவரி 29 மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது

முன் பதிவுக்கு: https://bit.ly/38rk4EL

அடுத்த கட்டுரைக்கு