Published:Updated:

கேள்வி - பதில் : பெற்றோருக்கு ஹெல்த் பாலிசி... எது பெஸ்ட்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

காப்பீட்டு ஆலோசனை

என்னுடைய 6 லட்சம் ரூபாய் கவரேஜ் தொகைகொண்ட ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியிலேயே எனது சீனியர் சிட்டிசன் பெற்றோர்களுக்கும் கவர் ஆகிறது. இருந்தாலும், அவர்களுக்கு மட்டும் கூடுதல் பாலிசி எடுக்கலாம் என்று நினைக்கிறேன். டாப்அப் பாலிசி மாதிரி எடுக்கலாமா... அல்லது வேறு வழிகள் இருக்கின்றனவா?

- ஆர்.கார்த்திக், கோயம்புத்தூர்

வி.குருநாதன், முதன்மைச் செயல் அதிகாரி, டி.வி.எஸ் இன்ஷூரன்ஸ்

“பொதுவாகவே, நம்மில் பலர் மருத்துவச் செலவு வந்த பிறகுதான் காப்பீட்டைப் பற்றியே சிந்திக்கிறோம். சூப்பர் டாப்அப் பாலிசியை நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம். பெற்றோரின் வயதையும் உங்கள் வயதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. பெற்றோருக்காகவும் உங்களுக்காகவும், மற்றும் உங்கள் மனைவி, பிள்ளைகளுக்காகவும் தனித்தனியாகக்கூட டாப்அப் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இப்படித் தனியாக எடுப்பதால் பிரீமியம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், வயது வரம்புதான் காப்பீட்டு பிரீமியத் தொகையை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி. அடிப்படை பாலிசிபோலவே, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கவரேஜ் இருக்காது. இது நிறுவனத்துக்கு நிறுவனம் சற்று மாறுபடும். நிபந்தனைகளை நன்றாகப் படித்துப் பார்த்து அதன் பிறகு பாலிசி எடுத்துக்கொள்ளவும்.”

வி.குருநாதன், ஆர்.கணேசன்
வி.குருநாதன், ஆர்.கணேசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் புதிதாக வாங்கவிருக்கும் வீட்டின் சந்தை மதிப்பு, சதுர அடிக்கு 1,400 ரூபாயாக உள்ளது. ஆனால், வழிகாட்டி மதிப்பு, சதுர அடிக்கு 1,900 ரூபாயாக உள்ளது. வீட்டுக் கடன் வாங்கும்போது எந்த மதிப்பைக் கணக்கில் கொள்வார்கள், வீட்டுக் கடன் கூடுதலாகக் கிடைக்க என்ன செய்வது?

- பி.விஷால் இ-மெயில் மூலம்

ஆர்.கணேசன், முதன்மைச் செயல் அதிகாரி, நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ்

“பொதுவாக, வழிகாட்டி மதிப்பைவிட சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இங்கே தலைகீழாக இருக்கிறது. வங்கிகள் / நிதி நிறுவனங்கள் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் அளித்த மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் கடன் வழங்கும். சந்தை மதிப்பு குறைவாக இருப்பதால், அந்தக் குறைந்த மதிப்புக்குப் பத்திரம் பதிவு செய்யலாம். ஆனால், பதிவுக் கட்டணம், வழிகாட்டி மதிப்புக்குச் செலுத்த வேண்டும். வங்கிகள் / நிதி நிறுவனங்கள் வங்கி மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் கடன் வழங்கும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

நான் ஏற்கெனவே ஏற்றுமதி செய்த பொருள்களுக்கு, பொருளை வாங்கிய நபரிடமிருந்து பணம் வரவில்லை. இந்த மாதிரியான சிக்கலான சூழலைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் வசதி இருக்கிறதா... எப்படிக் கையாள்வது?

- கே.விஷ்வா, கோயமுத்தூர்

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்

“காப்பீடு இருக்கிறது. இந்த வகை சிக்கல் வராமல் இருக்க ஏற்றுமதி செய்வதற்கு குறிப்பிட்ட இறக்குமதி யாளருக்கு இ.சி.ஜி.சி (ECGC) எடுத்து பிரீமியம் கட்டவும். இறக்குமதியாளர் பணம் கொடுக்கவிலை என்று வைத்துக்கொள்வோம். அப்போது, இ.சி.ஜி.சி அனுப்பப்படும் சரக்கின் 90% எஃப்.ஓ.பி (FOB-Freight On Board) மதிப்பை இழப்பீடாக அளிக்கும். இந்த பாலிசியை பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் எடுக்க வேண்டும்.”

கே.எஸ்.கமாலுதீன், ஸ்ரீகாந்த் மீனாட்சி
கே.எஸ்.கமாலுதீன், ஸ்ரீகாந்த் மீனாட்சி

கடந்த 2018-ம் ஆண்டுவரை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தேன். தவிர்க்க முடியாத காரணத்தால் அதைத் தொடர முடியவில்லை. தற்போது அந்த முதலீட்டை என் மகன் தொடர முடியுமா?

- த.வேல்முருகன், திருச்சி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், primeinvestor.in

“ஒரு எஸ்.ஐ.பி முதலீட்டை இன்னொருவர் தொடர்வதில் எந்த ஆதாயமும் இல்லை. வருமான வரிக் கணக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு எஸ்.ஐ.பி தவணையும் ஒரு தனி முதலீடுதான். எனவே, நீங்கள் உங்கள் முதலீட்டை நிறுத்திவிட்டு, உங்கள் மகனை ஒரு புதிய எஸ்.ஐ.பி-யை தொடங்கச் சொல்லலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com