Published:Updated:

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

பி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.எஃப்

பி.எஃப் உறுப்பினர் இணையதளத்தில் உரிய விவரங்களைச் சரிபார்த்து வைத்திருப்பது சிக்கலைத் தவிர்க்க உதவும்!

பணி ஓய்வு பெறும்போது, பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற நான் என்ன செய்ய வேண்டும்?

இசக்கி முத்து, பாளையங்கோட்டை, திருநெல்வேலி

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

“உறுப்பினர் யு.ஏ.என் (UAN)-ஐ ஆதாரில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணைக் கொண்டு செயலாக்கம் (Activate) செய்து, பிறகு ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கை யு.ஏ.என் உடன் இணைத்து, பிறந்த தேதி, பணியில் சேர்ந்த மற்றும் விடுபட்ட தேதி, தந்தை பெயர், கணவன் / மனைவி பெயர் போன்றவற்றை பி.எஃப் உறுப்பினர் இணையதளத்தில் (member portal) சரிபார்த்து வைத்திருந்தால், ஓய்வு பெறும்போது சிக்கல் இல்லாமல் பி.எஃப் தொகையைப் பெறமுடியும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விபத்து வழக்கு ஒன்றில், நீதிமன்றம் ரூ.8 லட்சத்தை வழக்கு தேதியிலிருந்து 12% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. காப்பீட்டு நிறுவனம் முதலில் ரூ.8 லட்சத்தை மட்டும் கொடுத்தது. ஆறு மாதங்கள் கழித்து வட்டித் தொகை ரூ.5 லட்சம், அதற்கு வருமான வரிச் சட்டம் 194-ன்படி வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய வேண்டும். 10% மட்டும் வரிப் பிடித்தம் செய்யப்படும்; பான் கார்டு இல்லையென்றால் 20% வரி பிடிக்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. மனுதாரர் பான் கார்டு எண் அனுப்பினார். நீதிமன்றம் இவ்வளவு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சொல்லியும் வட்டித் தொகையில் வரி பிடிப்பது சரிதானா?

சேரலாதன், புதுக்கோட்டை

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

“விபத்து வழக்குகளில் வட்டிக்கு இப்படி வரி பிடிக்கப்படுவது நடைமுறைதான். இங்கே வட்டி என்பது ஒருவரின் இதர வருமானமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் காப்பீட்டு நிறுவனம் டி.டி.எஸ் பிடித்துக்கொண்டுதான் தருவார்கள். நீங்கள் பான் எண் கொடுத்தால், 10% வரி பிடிப்பார்கள். இல்லையென்றால், 20% வரி பிடிப்பார்கள். மனுதாரர் வருமான வரியைக் கணக்கிட்டு, அவரின் அடிப்படை வருமான வரம்பு மற்றும் வரிச் சேமிப்பு முதலீட்டுக்கேற்ப, ரீஃபண்ட் கேட்க முடியும் அல்லது கூடுதல் வரி கட்ட வேண்டி வரலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் உறவினர் ஒருவர் என்னிடம் அவசரத் தேவைக்கு ரூ.40,000 வாங்கினார். இந்தப் பணத்தை வட்டி இல்லாமல் இரண்டு மாதங்களில் தருவதாகச் சொன்னார். நான் ஆன்லைன் மூலம் அவரின் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பினேன். அவரிடம் கடன் கொடுத்தது தொடர்பாக எந்த உறுதிமொழிப் பத்திரமும் நான் எழுதி வாங்கவில்லை. இப்போது கடனாக வாங்கியப் பணத்தைத் தர மாட்டேன் என்கிறார். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லை. அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வழி உள்ளதா?

ஜி.எத்திராஜ், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

“இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-படி வழக்கு தொடரலாம். உட்பிரிவு 2 (ஹெச்)–ன்படி, செயல்படுத்தக்கூடிய ஒவ்வோர் உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி என்பது ஒப்பந்தமாகும். இதன்படி, சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீங்கள் வட்டி வாங்கும் நோக்கத்தோடு பணம் தரவில்லை. ஆன்லைன் மூலம் அவரின் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளீர்கள். உங்களின் கைப்பேசி உரையாடல் தேதி மற்றும் நேரம் போன்ற ஆதாரங்கள் பயனுடையதாக இருக்கும். மேலும், உறவினர் உங்களுக்கு அனுப்பிய வங்கிக் கணக்கு எண் மற்றும் அனைத்து பதிவுகள் அடிப்படையில் நீங்கள் வழக்கு தொடரலாம். பணம் வாங்கியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடியாதவர், பணம் வாங்கும்போது மது அருந்தியிருந்தார், திவாலானவர் என்றால் அவரிடமிருந்து பணத்தைத் திரும்பிக் கேட்க முடியாது.”

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

எண்டோவ்மென்ட் பாலிசிகளின் முதிர்வுத் தொகை ரூ.7 லட்சம் என் வங்கிக் கணக்கில் உள்ளது. என் வங்கி மேலாளர், 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டாக ரூ.5 லட்சம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிசி வருட பிரீமியமாக ரூ.1 லட்சம், ஏழு வருடங்களுக்குச் செலுத்தி 15 வருடத்தில் கணிசமான தொகையை எதிர்பார்க்கலாம் என்கிறார். பணி ஓய்வு பெற இன்னும் நான்கு வருடங்கள் இருக்கும் நிலையில், இந்தத் திட்டம் சரியா? இந்த ரூ.7 லட்சம் தவிர, மாதம் ரூ.6,000 முதலீடு செய்ய முடியும். ஓய்வு பெறும்போது எனக்கு மாத வருமானமாக ரூ.8,000 கிடைக்க தகுந்த ஆலோசனை வழங்குங்கள்.

க.முத்துகுமரன், சேரன்மகாதேவி

கேள்வி பதில் : பி.எஃப் தொகை... சிக்கல் இல்லாமல் பெற என்ன வழி? - சந்தேகங்களுக்கு சரியான தீர்வு!

“இன்னும் நான்கு வருடங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நீங்கள் ஏழு வருடங்களுக்கு பாலிசி பிரீமியம் கட்ட வேண்டுமென்றால், பணி ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்திலிருந்து கட்ட வேண்டும். அப்படிக் கட்ட இயலாத சூழ்நிலை வரும்போது கடன் வாங்கி பிரீமியத்தைக் கட்ட முற்படுவீர்கள். பிரீமியம் கட்டத் தவறினால் பாலிசி காலாவதியாகிவிடும். மேலும், 15 வருடங்களுக்குப் பிறகுதான் முதிர்வுத் தொகை கிடைக்கும் என்பதால், அது உங்களுக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. வைப்புத் தொகை வட்டி கணிசமாக வீழ்ந்துகொண்டிருக்கும் (சுமார் 5.5%) இந்த நேரத்தில் ரூ.5 லட்சத்தை முழுவதுமாக ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுவது புத்திசாலித்தனமாகாது. முதலில் டேர்ம் பாலிசி சுமார் ரூ.25 லட்சம், கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்துக்கு மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது. ரூ.3,000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் , கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் 4 வருடங்களுக்கு முதலீடு செய்து ஆண்டு வருமானம் 10% எனக் கணக்கிடும்போது ரூ.3.5 லட்சம் எதிர்பார்க்கலாம். அவசர நிதிக்காக ரூ.50,000 லிக்விட் ஃபண்டிலும், மீதமுள்ள ரூ.6.5 லட்சத்தை ரூ.3 லட்சம் கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், ரூ.3.5 லட்சம் எஸ்.பி.ஐ ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் எனப் பிரித்து 4 வருடம் முதலீடு செய்து வர வேண்டும். ஆண்டு வருமானம் சராசரியாக 10% எனக் கணக்கிடும்போது ரூ. 9.5 லட்சம் எதிர்பார்க்கலாம். ரூ.13 லட்சத்தை ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் மூலம் ரூ.8,000 பெற முடியும். இந்த முறையில் கடந்த 5, 10 வருட காலங்களில் ஆண்டு வருமானமாக 9% முதல் 12% கிடைத்திருக்கிறது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com