Published:Updated:

பிட்காயினில் நம்பி முதலீடு செய்யலாமா? வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்!

பிட்காயின் வர்த்தகம்
பிட்காயின் வர்த்தகம்

கிரிப்டோகரன்சியில் ஒரு வகையான இந்த பிட்காயின் தற்போது 50,000 டாலரைத் தாண்டி வர்த்தகம் ஆகிறது. குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபத்தை இந்த பிட்காயின் தந்ததால், பலரும் இதில் பணம் போடத் துடிக்கின்றனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீப காலமாக படித்தவர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது பிட்காயின் வர்த்தகம். கிரிப்டோகரன்சியில் ஒரு வகைதான் இந்த பிட்காயின். தற்போது இதன் மதிப்பு 50,000 டாலரைத் தாண்டி வர்த்தகம் ஆகிறது. குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபத்தை இந்த பிட்காயின் தந்ததால், பலரும் இதில் பணம் போடத் துடிக்கின்றனர்.

பிட்காயின்
பிட்காயின்
பிட்காயின் வர்த்தகம் - நம்பி பணத்தைப் போடலாமா?

ஆனால், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பணத்தைப் போடலாமா, யார் போடலாம், பணம் போடுவதற்குமுன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல நாணயம் விகடனும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சும் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடத்தவுள்ளன.

இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டர் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், நிதிஷ் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் லீடர் மெய்யா நாகப்பன், ஜியோட்டர் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இணைய நிறுவரான ஜி.அர்ஜுன் விஜய் ஆகியோர் பேசுகின்றனர்.

பிட்காயின் வர்த்தகம்
பிட்காயின் வர்த்தகம்

இந்தக் கூட்டம் ஜூம் இணையதளம்மூலம் நடக்கவுள்ளது. கிரிப்டோகரன்சி தொடர்பாக ஆர்வம் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள் மற்றும் தலைவிகள் என எல்லோரும் கலந்துகொள்ளலாம். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://bit.ly.3svse8D என்கிற லிங்கை க்ளிக் செய்து தங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்ளலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு