Published:Updated:

முதலீட்டில் ஜாம்பவான்களின் வெற்றி மந்திரங்கள் என்னென்ன? - விளக்கும் நாணயம் விகடன் வெபினார்

நிதிப் பாடங்கள்
நிதிப் பாடங்கள்

முதலீட்டு ஆலோசகர்கள் சுரேஷ் சடகோபன், வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் கே.எஸ்.ராவ், பிராந்திய தலைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, `பிரபல முதலீட்டுக் குருக்களின் தனிநபர் நிதிப் பாடங்கள்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 12.00 மணி வரை நடைபெறுகிறது.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay
பாதுகாப்புக்கும் வருமானத்துக்கும் உத்தரவாதம்; பத்திரங்களில் முதலீடு செய்வது ஏன் நல்லது? - 15

இதில் முதலீட்டு ஆலோசகர்கள் சுரேஷ் சடகோபன், வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் கே.எஸ்.ராவ், பிராந்திய தலைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

`சம்பளத்தில் சேமிப்பு போகத்தான் மீதியை செலவு செய்ய வேண்டும்; நீங்கள் தூங்கும் போதும் உங்களின் பணம் சம்பாதித்துக்கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சாகும் வரைக்கும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்' என்பது உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் பண மொழிகள்.

நிதிப் பாடங்கள்
நிதிப் பாடங்கள்
மியூச்சுவல் ஃபண்ட்... எப்படி முதலீடு செய்வது?

``வெற்றிகரமான முதலீடு என்பது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பதல்ல; சரியான முறையில் ரிஸ்க் எடுப்பதுதான். முதலீட்டை நிர்வகிப்பது என்பது அதன் லாபத்தை பெருக்குவது அல்ல; அதன் மீதான ரிஸ்க்கை கையாள்வதுதான்." என முன்னணி முதலீட்டாளரும் வேல்யூ இன்வெஸ்டிங்-ன் தந்தை எனப்படும் பெஞ்சமின் கிரஹாம் சொல்லியிருக்கிறார்.

இது போல முதலீட்டுக் குருக்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அலசி ஆராயும் கூட்டம்தான் இது. இதில் ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் என பலரும் கலந்துகொள்ளலாம்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு