பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

முதலீடு

முதலீட்டின் முக்கியமான அடிப்படை என்பது ‘அனைத்துப் பணத்தையும் ஒரே சொத்துப் பிரிவில் போடக் கூடாது; பணத்தை பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்’ என்பதாகும். இதை அஸெட் அலொகேஷன் என்பார்கள்.

நமது முதலீட்டின் பெரும்பகுதி பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கான முதலீடு கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.

கடன் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையில் முக்கியமான இடம்பிடித்திருப்பது கடன் பத்திரங்கள் (Bonds) ஆகும். ஒரு முதலீட்டுக் கலவையின் அதிக வருமானத்துக்கு ஈக்விட்டி முதலீடுகள் அதிகம் உதவும் நிலையில், அதன் நிலைத்தன்மைக்குக் கடன் சார்ந்த திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/
கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கடன் பத்திரங்கள்...

சரியான நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வது போல, நல்ல கடன் பத்திரங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வதும் திறமையான கலை ஆகும். அந்த வகையில், ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜருக்கு இருக்கும் தேவை, டெப்ட் ஃபண்ட் மேனேஜருக்கும் இருக்கிறது.

பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனப் பங்குகளில் இருந்து ஒரு நல்ல பங்கை ஃபண்ட் மேனேஜர் சுலபமாகத் தேர்வு செய்ய முடியும். ஆனால், நல்ல நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களை ஒரு ஃபண்ட் மேனேஜர் அவரின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்ய முடியும்.

ஒரு நிறுவனம் அதற்குத் தேவையான பணத்தை முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு வெளியிட்டுத் திரட்டும். அல்லது, கடன் பத்திரங்களை வெளியிட்டுத் திரட்டும்.

கடன் பத்திரங்களை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விரிவாகப் பார்ப்போம்.

திரட்டும் தொகை...

நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீட் டாளர்களிடம் இருந்து கடனாகத் திரட்டும் என அறிவிக்கும். உதாரணமாக, ரூ.1,000 கோடி திரட்டும் என அறிவிக்கும் அதேநேரத்தில், முதலீட்டாளர் களிடமிருந்து அதிக ஆதரவு இருக்கும் பட்சத்தில் இதே அளவு தொகையைக் கூடுதலாகத் திரட்டிக் கொள்ள முடியும். இதை ‘கிரீன் ஷூ ஆப்ஷன்’ என்பார்கள்.

ஓரளவுக்கு அதிக தொகையைத் திரட்டும் நிலையில் விண்ணப்பித்தால், முதலீட்டாளர் களுக்கு சுலபமாகக் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு கிடைக்கும். பொதுவாக, கடன் பத்திரத்தின் முக மதிப்பு ரூ.1,000 என்பதாக இருக்கும். குறைந்தது 10 கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000-ஆக இருக்கும்.

கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வட்டி விகிதம் எவ்வளவு?

கடன் பத்திர முதலீட்டுக்கு நிறுவனம் ஆண்டுக்கு எவ்வளவு வட்டி வருமானம் வழங்கப் போகிறது என்பதை அறிவிக்கும்.இந்த வட்டி, கடன் பத்திரத்தின் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப மாறுபடும். ஒருவர் முதலீடு செய்யும்போது, அறிவிப்பில் தரப்பட்டிருக்கும் வட்டி விகிதம் தான், கடன் பத்திரத்திலும் அச்சிடப்பட்டு, குறிப்பிடப்பட் டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடுத்து, வட்டியை நிறுவனம், மாதம்தோறும் வழங்கக்கூடும். அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை, கடன் பத்திர முதிர்வில் மொத்த மாக எனப் பல நிலைகளில் வழங்கும். உங்களுக்கு எந்த முறையில் தேவை என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். பத்திர முதிர்வில் வட்டி வருமானம் தருவதை ‘குமுலேட் டிவ்’ (cumulative) என்பார்கள்.

முதலீட்டுக் காலம்...

அந்தக் கடன் ஓராண்டு தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் வரைக்கும் பல்வேறு முதலீட்டுக் காலத்தைக் கொண்டிருக்கும். இதைக் கவனித்து முதலீடு செய்வது அவசியம். இந்த முதிர்வுக் காலத்துக்கு ஏற்பதான் வட்டி வருமானம் கிடைக்கும். உங்களுக்கு இடையிடையே பணம் தேவைப்படும்பட்சத்தில் பணத்தைப் பல்வேறு முதிர்வுக் காலம்கொண்ட கடன் பத்திரங் களில் பிரித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இல்லை யெனில், கடன் பத்திரத்தை அதன் முதிர்வுக் காலத்துக்கு முன் உடைத்து எடுக்க அனுமதி இல்லாமல் இருக்கும் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

கடன் தகுதி...

ஒரு நிறுவனம், இப்படி கடன் பத்திரங்களை வெளியிட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பணம் வசூலித்துவிட்டு, சரியான நேரத்தில் வட்டி வழங்குவது மற்றும் அசலை திரும்ப வழங்கு வதைக் கடன் தகுதி (Credit Worthiness) என்பார்கள்.

பல முதலீட்டாளர்கள் இந்தக் கடன் தகுதியை சரியாகக் கவனிக் காமல் அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு, சிக்கலில் மாட்டிக்கொள் கிறார்கள். கடன் பத்திர முதலீட்டுக்கு மிக அதிக வட்டி வழங்கும் நிறுவனங்களின் கடன் தகுதி குறைவாக இருக்கும். பொது வாக, கடன் பத்திர முதலீட்டுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 9% - 9.5% வட்டி வழங்கிவரும் நிலையில், சில நிறுவனங்கள் 12% - 14% வட்டி வழங்குவதாக அறிவிக்கின்றன எனில், உஷாராக இருக்க வேண்டும்.

இந்தக் கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைப்போல் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது. நிலையான வருமானம் கிடைக்கும். மிக அதிகமாக 14% வருமானம் எனில், அதைத் தருவார் களா என்றால் சந்தேகம்தான். அதாவது, கடன் பத்திரங்களுக் கான வட்டி மற்றும் அசலை சரியாகத் திருப்பிச் செலுத்தும் தகுதி இந்த நிறுவனங்களுக்கு மிகக் குறைவாக இருக்கும்.

இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது?

ஒரு நிறுவனத்தின் கடன் தகுதி என்பது மிகவும் சாதகமானது, சாதகமானது, நிலையானது மற்றும் பாதகமானது (Very Positive, Positive, stable, Negative) என நான்கு நிலை களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

தரக்குறியீடு...

நிறுவனத்தின் கடன் தகுதிக் கேற்ப அது வெளியிடும் கடன் பத்திரங்களுக்குத் தரக்குறியீடு (Ratings) வழங்கப்படும். அதில் ஏஏஏ+ (AAA+) என்பது மிகவும் சாதகமான தரக் குறியீடாகும். இந்தத் தரக்குறியீடு கொண்ட பாண்டுகளில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம். இதற்கு கீழே, ஏஏ+, ஏ தரக்குறியீடு கொண்டவற்றில் முதலீடு செய்யலாம். ஆனால், இவற்றில் ரிஸ்க் கொஞ்சம் இருக்கிறது.

பிபிபி (BBB) தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்கள் நடுத்தர அளவு ரிஸ்க் கொண்டவையாகும். இதற்குக் கீழே பிபி, பிபி, சிசிசி, சிசி, சி, டி (D) ஆகிய தரக்குறியீடு கொண்ட பாண்டுகள் மிகவும் ரிஸ்க்கானவை. இவற்றை ஜங் (Junk) பாண்ட் என்பார்கள். இவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது; முதலுக்கே மோசம் போக வாய்ப்பு இருக்கிறது. பல நிறுவனங்கள் நெகட்டிவ் ரேட்டிங் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இவற்றின் அதிக வட்டி வருமானத்துக்கு ஆசைப்பட்டு சில முதலீட்டாளர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

கடன் பத்திர முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கடன் பத்திரம் வகை...

வெளியிடப்படுவது எந்த வகையான கடன் பத்திரம் என்பதைக் கவனியுங்கள். பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் (Non-convertible debentures - NCD), பங்குகளாக மாறும் கடன் பத்திரங்கள் (Convertible Debentures) என்பவை முக்கியமான இரு வகைகளாகும். என்.சி.டி வகை கடன் பத்திரத்தில் முதிர்வில் முதலீட்டுத் தொகை முதலீட்டாளருக்கு வழங்கப்படும். பங்குகளாக மாறும் கடன் பத்திரங்களில் முதிர்வில் போட்ட முதலுக்கு பதில், அந்த நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும்.

பல நேரங்களில் இந்தப் பங்குகள் மதிப்புமிக்கதாக இருக்காது.

உதாரணமாக, யெஸ் பேங்க் வெளியிட்ட பங்குகளாக மாறும் கடன் பத்திரங்களில் அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், வங்கி சிறப்பான செயல்பாட்டில் இருந்த காலத்தில் முதலீடு செய்தவர்கள், இப்போது பங்குகளைப் பெற்றுக்கொண்டு சிக்கலில் இருக்கிறார்கள். எனவே, எந்த வகையான கடன் பத்திரம் என்பதைக் கவனிப்பது மிக முக்கியமாகும்.

இதேபோல, கால் ஆப்ஷன் (Call Option) என்கிற ஒரு வகைக் கடன் பத்திரம் இருக்கிறது. இதில், கடன் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 14% வட்டி தருவதாக கடன் பத்திரத்தை

‘கால் ஆப்ஷன்’ முறையில் வெளியிடுகிறது. கடன் சந்தையில் வட்டி விகிதம் மிகவும் குறைந்து வரவே. இந்தப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, இதைவிட குறைவான வட்டியில் சுமார் 8% என்பது போல் புதிய கடன் பத்திரத்தை வெளியிடும். எனவே, இது போன்ற ‘கால் ஆப்ஷனி’லும் உஷாராக இருக்க வேண்டும்!