Published:Updated:

நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் LIC IPO விண்ணப்பங்கள்; என்ன காரணம்?

எல்.ஐ.சி ஐ.பி.ஓ

கிட்டத்தட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வெளியான போது 4.8 மில்லியன் விண்ணப்பங்கள் பங்குகள் வேண்டி வந்திருந்தன.

நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் LIC IPO விண்ணப்பங்கள்; என்ன காரணம்?

கிட்டத்தட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வெளியான போது 4.8 மில்லியன் விண்ணப்பங்கள் பங்குகள் வேண்டி வந்திருந்தன.

Published:Updated:
எல்.ஐ.சி ஐ.பி.ஓ

எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ள எல்ஐசி பங்குகளை போல மூன்று மடங்கு வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகித பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை விற்று கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு ஐ.பி.ஓ -வை மே 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வெளியிட்டது. இந்நிலையில் வெளியிடப்பட்ட பங்கு அளவை விட மூன்று மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எல்ஐசி
எல்ஐசி
LIC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் வந்த விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 7.34 மில்லியன். ஆனால் இதில் 6 முதல் 6.5 மில்லியன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும், மற்ற விண்ணப்பங்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் எல்.ஐ.சி நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வெளியான போது 4.8 மில்லியன் விண்ணப்பங்கள் பங்குகள் வேண்டி வந்திருந்தன. அதற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்திருப்பது எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்குத்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆண்டில் வெளியான ஸொமேட்டோ நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டில் கூட இதே போல 30% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுவாக ஐ.பி.ஓ வெளியீட்டின் போது இது போன்ற நிராகரிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு இருக்கும். ஆனால் ஐ.பி.ஓ வரலாற்றிலேயே எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில்தான் அதிக அளவில் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

இது குறித்து தகவல் தெரிவித்த எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை நிர்வகித்த முதலீட்டு வங்கிகள், ``பொதுவாக ஐ.பி.ஓ வெளியீட்டில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள், தங்களின் தரப்பில் தெரிவிக்கும் விவரங்களில் தவறுகள் செய்வது, பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பாக யூ.பி.ஐ பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது வழக்கம்" என தெரிவிக்கின்றன.

விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும். உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 945 ரூபாய்க்கு எல்ஐசி பங்கு வெளியீட்டு விலையாக இருக்கும்.

அடுத்த கட்டமாக, மே 17-ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism