சசி ரேகா

அண்மையில் புதிதாக அறிமுக மாகியுள்ள புதிய திட்டங்களை இங்கு பார்ப்போம்

எஸ்.பி.ஐ பென்ஷன் லோன் (SBI PENSION LOAN)

சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் பெறும் பென்ஷன் தொகையை அடிப்படையாக வைத்து தனிநபர் கடன் வாங்கும் புதிய திட்டத்தை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. ஒருவர் பெறும் பென்ஷன் தொகையைப் பொறுத்து கடன் அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் கடன் பரிசீலனைக் கட்டணம் மிகவும் குறைவு. விரைவாக கடனைப் பெற முடியும். கடன் தொகையை சுலப மாத தவணைகளில் திரும்ப செலுத்தும் வசதியுள்ளது. இந்தக் கடனை அனைத்து எஸ்.பி.ஐ கிளைகளிலும் பெற முடியும்.

கடன் தொகையின் மாதாந்தர செலுத்தும் இ.எம்.ஐ அளவானது கிடைக்கும் பென்ஷன் தொகையில் 33% என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 76 வயதுக்கு உட்பட்ட சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் தொகையில் இந்தத் திட்டத்தில் கடன் பெற முடியும். இது சந்தையில் உள்ள பிற பர்சனல் லோன் வகை களில் வசூலிக்கப்படும் வட்டியை விடக் குறைவாக அதாவது, 9.75% என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மிரே அஸெட் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (Mirae Asset Corporate Bond Fund)

இதில் திரட்டப்படும் AA+ ரேட்டட் கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும். பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தத் திட்டம், மார்ச் 9 அன்று முடிவடைகிறது. குறைந்த பட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.இதில் முதலீடு செய்யும்போது நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கிடையாது. எஸ்.ஐ.பி முறையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்ச முதலீட்டுக் காலமாக 3 ஆண்டுகள் என்ற கால அளவைக்கொண்ட முதலீட்டாளர்கள் வங்கி டெபாசிட் டைவிட அதிக வருமானம் கிடைக்க இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாதுகாப்பான பத்திரங் களில் மட்டும் முதலீடு செய்யப் படுவதால், இதில் ரிஸ்க் குறைவு.

ஹெச்.எஸ்.பி.சி குளோபல் ஈக்விட்டி கிளைமேட் சேஞ்ச் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (HSBC Global Equity Climate Change Fund)

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது தீமேட்டிக் வகை ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் வகை திட்டம். பசுமைக் கட்டடங்கள் கட்டும் நிறுவனங்கள், நீர் மேலாண்மைக்குத் துணைபுரியும் நிறுவனங்கள், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உதவும் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் மார்ச் 3 அன்று தொடங்கி மார்ச் 17 அன்று முடிகிறது. மார்ச் 24-க்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் ஓப்பன் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டம் டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் கிடைக்கிறது. எஸ்.ஐ.பி முறையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

கோட்டக் ஐ.டி இ.டி.எஃப் (Kotak IT ETF)

இது நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸில் முதலீடு செய்யப்படும் பேஸிவ் வகை திட்டமாகும். நேரடிப் பங்குகளில் முதலீடு செய்யாமல் இண்டெக்ஸில் முதலீடு செய்யப்படுவதால், இதில் திட்டத்தை நிர்வகிக்கும் செலவு குறைவு. இந்தத் திட்டம் மார்ச் 1 அன்று முடிவடைந்துவிட்டது என்றாலும் மார்ச் மத்தியிலிருந்து ஓப்பன் மார்க்கெட்டில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில் நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது.இந்தத் திட்டத்தில் ஐ.டி துறை சார்ந்த பங்குகளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதிகம் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.