நடப்பு
Published:Updated:

ரிஸ்க் எடுப்பவர்களுக்கு கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள்! புதிய அறிமுகம்...

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு - N E W S C H E M E S

சசி ரேகா

அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் சில முதலீட்டுத் திட்டங்கள் பற்றிப் பார்ப்போம்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ட்ஷியல் நிஃப்டி லோ வால் 30 இ.டி.எப் ஃபண்ட் (ICICI Prudential Nifty Low Vol 30 ETF Funds of Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிஃப்டி இண்டெக்ஸில் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ஃபண்ட் ஆப் ஃபண்ட் வகை திட்டம் ஆகும். பொதுவாக, பெரிய நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டம் பெரும்பாலும் புளூசிப் நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்யும்.

குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு ஏப்ரல் 6 வரை விண்ணப்பிக்க முடியும். இதில் முதலீடு செய்யும்போது நுழைவுக் கட்டணம் கிடையாது. ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் குறைந்தபட்ச வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் என்ற இரண்டு முறைகளில் முதலீடு செய்யலாம். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகை களில் ஏதாவது ஒரு முறையில் வருமானம் பெற முடியும். இந்தத் திட்டம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், நீண்டகால நோக்கில் ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சந்தைக்குப் புதுசு
சந்தைக்குப் புதுசு

ஆக்ஸிஸ் டெக்னாலஜி இ.டி.எஃப் ஃபண்ட் (Axis Technology ETF Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் இந்தப் புதிய செக்டோரல் வகை திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ள பங்குகளில் மட்டும் இந்தத் திட்டம் முதலீடு செய்யும்.

குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் விண்ணப்பத் தேதி மார்ச் 23-ல் முடிவடைந்தாலும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஓப்பன் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் என்ற இரண்டு முறைகளில் முதலீடு செய்ய லாம். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் (Aditya Birla Sun Life Nifty Midcap 150 Index Fund)

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற திட்டத்தையும், ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி ஸ்மால்கேப் நிஃப்டி 50 இண்டெக்ஸ் என்ற இரண்டு திட்டங் களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் விண்ணப்பத் தேதி மார்ச் 26 வரை என்றாலும், ஏப்ரல் முதல் வாரத் திலிருந்து ஓப்பன் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியும்.

பங்குச் சந்தையில் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம்.