Published:Updated:

விரைவில் வருகிறது சில்வர் இ.டி.எஃப்... விதிமுறைகளை அறிவித்தது செபி!

சில்வர் இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
சில்வர் இ.டி.எஃப்

சில்வர் இ.டி.எஃப்

விரைவில் வருகிறது சில்வர் இ.டி.எஃப்... விதிமுறைகளை அறிவித்தது செபி!

சில்வர் இ.டி.எஃப்

Published:Updated:
சில்வர் இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
சில்வர் இ.டி.எஃப்

பாலாஜி வெங்கட்

உலக அளவில் கோல்டு இ.டி.எஃப் மிகவும் பிரபலம். இந்தியாவில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளை நடத்தி வருகின்றன. தற்போது இந்தப் பிரிவில் 21 ஃபண்டுகள் உள்ளன. இவை கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 15%, ஐந்தாண்டுக் காலத்தில் 9% வருமானம் தந்துள்ளன.

இந்த கோல்டு இ.டி.எஃப் திட்டத்தைப் போல, வெள்ளிக்கும் இ.டி.எஃப் திட்டத்தைக் கொண்டுவரலாம் என செபி தற்போது ஒப்புதல் வழங்கியிருப்பதுடன், அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

தங்கத்தைப் பொறுத்தவரை, ஆபரணப் பயன்பாடுதான் அதிகம். ஆனால், வெள்ளிக்கு ஆபரணப் பயன்பாட்டுடன், தொழிற்சாலை பயன்பாடும் அதிகம். அந்த வகையில், அதன் தேவை அதிகரித்து, விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வருகிறது சில்வர் இ.டி.எஃப்... விதிமுறைகளை அறிவித்தது செபி!

இந்த நிலையில், நம் நாட்டில் சில்வர் இ.டி.எஃப் கொண்டு வர செபி விதித்திருக்கும் முக்கியமான விதிமுறைகள் வருமாறு...

* முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் குறைந்தபட்சம் 95% வெள்ளி மற்றும் சில்வர் சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

* விலையைக் கண்காணிப்பதில் டிராக்கிங் எரர் 2 சதவிகிதத்துக்குமேல் இருக்கக் கூடாது.

* 10% தொகையை எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ்களில் முதலீடு செய்யலாம்.

* சில்வர் இ.டி.எஃப் ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதன் இணையதளத்தில் தினசரி வெளியிட வேண்டும்.

* இதன் பென்ச் மார்க்-ஆக வெள்ளி விலை இருக்கும். முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு 30 கிலோ பார்களாக 99.9% தூய வெள்ளியாக வாங்கி வைக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism