Published:Updated:

டிஜிட்டல் மயமாகும் காப்பீட்டுத் திட்டங்கள்! எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

சந்தைக்குப் புதுசு

டிஜிட்டல் மயமாகும் காப்பீட்டுத் திட்டங்கள்! எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான புதிய திட்டங்கள் சில்வற்றைப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் கன்சம்ஷன் இ.டி.எஃப் ஃபண்ட் (Axis Consumption ETF Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி கன்சம்ஷன் இண்டெக்ஸ் குறியீட்டில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் பொருள்கள் சந்தை தொடர்புடைய நிறுவனங் கள் வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 13-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். இது ஒரு பாசிவ் செக்டோரல் வகை திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

டிஜிட்டல் மயமாகும் காப்பீட்டுத் திட்டங்கள்! எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

எல்.ஐ.சி-யின் ஆனந்தா செயலி

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவன மான எல்.ஐ.சி வாடிக்கையாளர்களின் புதிய காப்பீட்டுத் திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் முகவர்கள் மற்றும் பிற விநியோகஸ்தர்கள் அனைவரும் பயன்படுத்த முடியும். டிஜிட்டல் முறையில் கே.ஒய்.சி விவரங்களைச் சரிபார்க்க இந்தச் செயலி உதவும். காப்பீட்டுத் திட்டங்களை இதன்மூலம் விரைவாக வாடிக்கையாளருக்கு வழங்கிட முடியும். கொரோனா காலகட்டத்தில் தமது திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் இந்தச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

பாரத் ரிஜிஸ்ட்ரேஷன் வசதி

ஒரு மாநிலத்தில் புதிய வாகனம் வாங்கும் போது அந்த மாநிலத்தின் வரிசை எண்ணில் அந்த வாகனம் பதிவு செய்யப்படும். உதாரணமாக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப் படும் வண்டிகள் TN என்ற வரிசையின் கீழ் பதிவு செய்யப்படும். அந்த வாகனத்தின் உரிமையாளர் பிற மாநிலங்களுக்குச் சென்றால், அதிகபட்சம் ஒரு வருடம் வரை பழைய மாநில வரிசை எண்ணில் வாகனத்தைப் பயன்படுத்த முடியும். ஒரு வருடத்துக்குமேல் வேறொரு மாநிலத்தில் தங்கியிருக்கும்போது அந்தப் புதிய மாநிலத்தின் வரிசை எண்ணுக்கு மாற வேண்டும். அரசு மற்றும் சில தனியார் துறை நிறுவனங்கள் பல மாநிலங்களில் அலுவலகங் கள் கொண்டிருக்கும். பணி நிமித்தம் காரணமாகப் பல மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் சூழல் ஒருவருக்கு ஏற்படலாம். அவர்கள் வாகனத்தின் வரிசை எண்ணை ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறும் போதும் மாற்ற வேண்டியிருக்கும். அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் BH - பாரத் என்ற புதிய வரிசை நம்பரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒருவர் பணி பரியும் அலுவலகம் நான்கு மாநிலங்களில் அலுவலகக் கிளை வைத்திருந்தால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வாடிக்கையாளர் தனது வண்டி வரிசை எண்ணை BH வரிசையாகப் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் வண்டிகளை நாட்டில் எந்த மாநிலத்திலும் பயன்படுத்தலாம். இது அரசுத்துறை மற்றும் சில தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் விஷயமாகும்.

ஃப்ளிப்கார்ட் வழங்கும் ஈஸி கிரெடிட்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சிறு கடைகள் நடத்தும் தமது வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஐ.டி.எஃப்சி ஃபர்ஸ்ட் பேங்குடன் சேர்ந்து இந்தப் புதிய கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 முதல் ரூ.2,00,000 வரை 15 நாள்களுக்கு வட்டியில்லாக் கடன் வாங்க முடியும். இந்தத் திட்டம் சிறு கடை நடத்துபவர்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக இருக்கும்!