Published:Updated:

அபாயகரமான நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! பாலிசிதாரர்கள் கவனத்துக்கு...

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

N E W S C H E M ES

அபாயகரமான நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! பாலிசிதாரர்கள் கவனத்துக்கு...

N E W S C H E M ES

Published:Updated:
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சில...

பஜாஜ் அலையன்ஸ்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - கிரிட்டி-கேர் (Criti-Care)

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், கிரிட்டி-கேர் என்ற புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் 43 அபாயகரமான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சை பெற முடியும்.

இந்தத் திட்டம் ஐந்து பிரிவுகளாக உள்ளது. கேன்சர் சிகிச்சை, இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை, கிட்னி சிகிச்சை, மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் உணர்ச்சி உறுப்புகள் தொடர்பான சிகிச்சை என்று அபாய நோய்கள் ஐந்து பிரிவுகளாக இந்தத் திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர் இந்தப் பிரிவுகளில் தேவைப்படும் காப்பீட்டுத் தொகையை தனித் தனியாகக் குறிப்பிடும் வசதி உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் காப்பீட்டுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையிலும் குறிப்பிட முடியும். இந்தத் திட்டத்தில் 2 கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு எடுக்க முடியும்.

உதாரணத்துக்கு, பாலிசி எடுக்க இருப்பவரின் பரம்பரையில் இதய சம்பந்தப்பட்ட கோளாறு இருக்கிறது என்னும்போது, அவர் அதிக தொகையை இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் காப்பீட்டுத் தொகையாகத் தேர்வு செய்ய முடியும்.

சிலவகை அபாயகரமான நோய்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளைவிட புறநோயாளி யாக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஒருவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டால் அறுவைசிகிச்சை செய்வதற்கு முன்பு பல மாதங்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றால் மட்டுமே காப்பீட்டுத் தொகை யை வழங்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் மருத்துவமனையில் தங்காமல் அபாய கரமான நோய் தொடர்பான சிகிச்சைக் கட்டணங்களுக்குக் காப்பீட்டைக் கோர முடியும். எனவே, அதனால் மருத்துவக் காப்பீடு தேவைப்படுபவர்கள் பஜாஜ் அலையன்சின் கிரிட்டி- கேர் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

என்.சி.டி திட்டங்கள்

இந்த வாரம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மூன்று புதிய என்.சி.டி திட்டங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.

முத்தூட் ஃபைனான்ஸ் என்.சி.டி (Muhtoot Finance Limited Tranche III NCD)

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தை முத்தூட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பத்திரங்களில் ஏப்ரல் 8 தொடங்கி ஏப்ரல் 29 வரை முதலீடு செய்ய முடியும். இந்தக் கடன் பத்திரத்தின் முகமதிப்பு 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10,000 ரூபாய் என்கிற அளவில் இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.

வட்டியை ஒவ்வொரு மாதமும் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் திட்டக் காலம் குறைந்த பட்சம் 38 மாதங்கள் என்கிற அளவிலிருந்து 60 மாதங்கள் வரை உள்ளது. திட்டக் காலத்துக்கு ஏற்ப வட்டித் தொகையானது 6.85% முதல் 8% வரை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

கொசமட்டம் ஃபைனான்ஸ் என்.சி.டி (Kosamattam Finance NCD March 2021)

கொசமட்டம் நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டம் மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 23-ல் முடிவடைகிறது. இந்தக் கடன் பத்திரத்தின் முகமதிப்பு 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 10,000 ரூபாய் என்ற அளவில் இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கொசமட்டம் நிறுவனம் 175 கோடி ரூபாய் திரட்டுகிறது. இந்தத் திட்டத்தின் காலம் 400 நாள்கள் என்ற அளவிலிருந்து 6 வருடங்கள் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. திட்டக் காலத்துக்கு ஏற்ப 8% முதல் 10.41% வரை வட்டி கிடைக்கும்.

எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் என்.சி.டி (Edelweiss Financial NCD April 2021)

எடெல்வைஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய முதலீட்டுத் திட்டத்தில் ஏப்ரல் 23 வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.200 கோடி நிதி திரட்டுகிறது.

இந்தத் திட்டத்தில் 3 வருடங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. திட்டத்தின் கால அளவுக்கேற்ப 9.09% முதல் 9.69% வரை வட்டி கிடைக்கும்.

என்.சி.டி திட்டங்கள் சற்று ரிஸ்க் குறைந்த முதலீடாகக் கருதப்படுகிறது. முதலீட்டாளர் கள் இந்தத் திட்டங்களை ஆராய்ந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறன், தேவைக்கேற்ப முதலீடு செய்தால் வங்கி டெபா சிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆரோக்கிய சஞ்சீவினி உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

இந்தியக் காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) ஆரோக்கிய சஞ்சீவினி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தின் உச்ச வரம்பை அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சொல்லியுள்ளது. குறைந்த பிரீமியத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காப்பீடு வழங்கும் நல்ல திட்டமாக அரசால் இந்த ஆரோக்கிய சஞ்சீவினி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்தில் ரூ.5 லட்சம் என்பது அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் போதாது என்கிற நிலை இருந்துவந்தது. இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக மருத்துவக் காப்பீட்டின் அதிகபட்ச தொகையை தற்போது உயர்த்த ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளர்கள் இந்தப் புதிய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.