Published:Updated:

அதிக வருமானம்... கொஞ்சம் ரிஸ்க்... புதிய என்.சி.டி திட்டங்கள்!

சந்தைக்குப் புதுசு

பிரீமியம் ஸ்டோரி

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி ஹெல்த்கேர் இ.டி.எஃப் (Adithya Birla Sun Life Nifty Healthcare ETF)

நிஃப்டி ஹெல்த்கேர் இண்டெக்ஸில் முதலீடு செய்யப்படும் இந்தப் புதிய திட்டத்தை ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 20 வரை முதலீடு செய்ய முடியும்.

இது ஒரு பாசிவ் வகை திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி முறையில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

செக்டோரல் வகை முதலீடுகள் அதிக ரிஸ்க் உடையவை. ஆகையால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிக வருமானம்... கொஞ்சம் ரிஸ்க்... புதிய என்.சி.டி திட்டங்கள்!

என்.ஜே பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (NJ Balanced Advantage Fund)

அதிக ரிஸ்க் உடைய பங்குச் சந்தை மற்றும் குறைவான ரிஸ்க் உடைய கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்யும் பேலன்ஸ்டு திட்டத்தை என்.ஜே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 22 வரை முதலீடு செய்யலாம். பேலன்ஸ்டு வகைத் திட்டங்கள் மிதமான ரிஸ்க் உடையதாகும்.

நீண்ட கால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ள இந்தத் திட்டத்தில் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் சேரலாம்.

முத்தூட் ஃபைனான்ஸ்: என்.சி.டி திட்டங்கள்

பங்குகளாக மாற்ற இயலாத என்.சி.டி திட்டத்தை முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 21-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். ஒரு பத்திரத்தின் முக மதிப்பு 1,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10,000 இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

400 கோடி ரூபாயை முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், இந்த என்.சி.டி மூலம் திரட்டுகிறது. இந்த முதலீட்டுக்கு 8.57% முதல் 10.2% வரை வட்டி வழங்கப்படும்.

வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்கும் இந்தத் திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

IMPS (உடனடிப் பணம் அனுப்பும் முறை) உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

இணையவழி வங்கிச் சேவை மூலமாகத் தற்போது ரூ.2 லட்சம் வரை உடனடியாகப் பணம் அனுப்பும் வசதி உள்ளது.

இதை மத்திய ரிசர்வ் வங்கி 5 லட்சம் ரூபாயாகத் தற்போது உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் பணம் அனுப்ப முடியும்.

இந்த மாற்றம் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்வதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் சேவை யைத் தரும் அனைத்து நிறுவனங்களும் ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு