Published:Updated:

ஒருமுறை பிரீமியம்... ஆயுள் முழுவதும் வருமானம்..!

சந்தைக்குப் புதுசு

பிரீமியம் ஸ்டோரி

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான திட்டங் களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஸ்மால்கேப் இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Small cap Index Fund)

ஸ்மால்கேப் இண்டெக்ஸில் முதலீடு செய்யும் புதிய பாசிவ் வகை திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. ஸ்மால்கேப் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக ஏற்ற இறக்கங்கள் கொண்டவையாக இருக்கும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

பார்தி ஆக்ஸா லைஃப் யூநாட்டி திட்டம் (Bharati AXA Life Unatti Scheme)

பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், புதிய வகை ஆயுள் காப்பீட்டு பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. வருமானம் நிச்சயமாகக் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் நான்கு வகைகளில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முதலாவது வகையில், வாடிக்கையாளர் முதல் பிரீமியம் செலுத்திய இரண்டாவது ஆண்டிலிருந்து பணப் பலன்களைப் பெற முடியும். இரண்டாவது வகையில், முதிர்வுக் காலத்துக்குப் பிறகு முதலீட்டைத் திரும்பப் பெறலாம். மூன்றாவது வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டைத் திரும்பப் பெற முடியும்.

நான்காவது வகையில், ஒருமுறை பிரீமியம் செலுத்திவிட்டு ஆயுள் முழுவதும் வருமானம் பெற முடியும். ஆயுள் காப்பீடு வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தோதான திட்டத்தில் சேரலாம்.

ஒருமுறை பிரீமியம்... ஆயுள் முழுவதும் வருமானம்..!

டி.எஸ்.பி நிஃப்டி 50 ஈக்வல் வெயிட் இ.டி.எஃப் ஃபண்ட் (DSP Nifty 50 Equal Weight ETF Fund)

நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களில் சரிவிகிதத்தில் அதாவது, 2% முதலீடு செய்யும் இந்தப் புதிய பாசிவ் வகை திட்டத்தை டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, நிஃப்டி குறியீட்டில் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு நிறுவனத்தின் வெயிட்டேஜைப் பொறுத்து முதலீட்டின் அளவு மாறுபடும். ஆனால், அனைத்து நிறுவனங்களிலும் சரிவிகிதத்தில் முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 29-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லார்ஜ்கேப் திட்டமான இது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கன்சப்ஷன் இ.டி.எஃப் (ICICI Prudential Consumption ETF)

எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிஃப்டி கன்சப்ஷன் குறியீட்டில் முதலீடு செய்யும் பாசிவ் வகை திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அக்டோபர் 25-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். பொதுவாக, செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை. அதனால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு