Published:Updated:

குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து காப்பீடு..!

சந்தைக்குப் புதுசு

பிரீமியம் ஸ்டோரி

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சில...

ஐ.டி.ஐ பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட் (ITI Pharma and Healthcare Fund)

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் சிறப்பான வருமானத்தை பார்மா துறை தந்தது. அதன்பிறகு, கடந்த ஓராண்டுக் காலத்தில் பார்மா துறை குறைவான வருமானத்தையே தந்துள்ளது.

என்றாலும், இந்தத்துறை சார்ந்த நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும் என்கிற எதிர்பார்ப்பில் ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் உடைய முதலீடு ஆகும். இதில் முதலீடு செய்ய எல்லோருக்கும் உகந்தது அல்ல. எனவே, அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்த ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மற்றவர்கள் இந்த ஃபண்டின் செயல்பாட்டைத் தொடர்ந்து கவனிக்கலாம்!

குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து காப்பீடு..!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் சரல் பச்சத் பீமா பிளான் (India First Life Saral Bachat Bima Plan)

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்தப் புதிய பாரம்பர்ய வகை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் 5 முதல் 7 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தினால் போதும். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் சேர்த்து காப்பீடு எடுக்கும் வசதியும் இந்த பாலிசியில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். ஆக்ஸிடென்டல் கவர் போன்ற ரைடர் பாலிசிகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு