Published:Updated:

ரிவார்டு பாயின்டுகள் காலாவதி ஆகாத புதிய கடன் அட்டை!

சந்தைக்குப் புதுசு

பிரீமியம் ஸ்டோரி

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

அடல் பென்ஷன் யோஜனா: டிஜிட்டல் வசதி அறிமுகம்

அரசு சார்பு பென்ஷன் திட்டத்தில் அடல் பென்ஷன் யோஜனா முக்கியமானது. இந்தத் திட்டத்தில் டிஜிட்டல் முறையில் சேரும் வசதியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDI) அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது ஆதார் கார்டு மூலம் இ-கேஒய்சி (eKYC) வெரிஃபிகேஷன் செய்து இந்தத் திட்டத்தில் சுலபமாகச் சேர்ந்துகொள்ள முடியும். அமைப்புசாரா தொழில்களில் உள்ள நபர்கள் தமது ஓய்வுக்காலத்துக்குச் சேமிப்பதற்கு இந்தத் திட்டம் பெரும் உதவி செய்கிறது.

தற்போது இந்தத் திட்டத்தில் சேருவதற்கு வங்கி அல்லது தபால் நிலையங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையில் இனி இந்தத் திட்டத்தில் சேரும் முயற்சி மேலும் பலரை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதற்கு நிச்சயம் உதவும்.

ரிவார்டு பாயின்டுகள் காலாவதி ஆகாத புதிய கடன் அட்டை!

யெஸ் பேங்க் மற்றும் பேங்க் பஜார் இணைந்து புதிய கடன் அட்டை அறிமுகம்

தனியார் வங்கியான யெஸ் பேங்க், தனியார் நிதிச் சேவை ஆன்லைன் நிறுவனமான பேங்க் பஜார் நிறுவனமும் இணைந்து வாடிக்கை யாளரின் கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பதற்கு உதவிடும் புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் கடன் அட்டையின் உதவியுடன் வாடிக்கையாளர் தனது கிரெடிட் ஸ்கோரை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், பொருள்கள் வாங்கும்போது கிடைக்கும் ரிவார்டு பாயின்டுகள், பெரும் பாலான பிற கடன் அட்டைகளில் குறிப்பிட்ட காலகட்டத்தில் காலாவதி ஆகிவிடும். ஆனால், இந்தப் புதிய கடன் அட்டையில் ரிவார்டு பாயின்டுகள் எப்போதும் காலாவதி ஆகாது என்பது இதன் சிறப்பாகும்.

இந்தப் பாயின்டுகளைப் பயன்படுத்தி பல சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ்: புதிய கடன் அட்டை அறிமுகம்.

கட்சிங் கிரெடிட் கார்டு என்ற புதிய கடன் அட்டையை கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏர்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதிக ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும்.

மேலும், இந்தக் கடன் அட்டை வைத்திருப் பவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயணம் செய்யும்போது பல சலுகைகள் கிடைக்கும்.

அதிக விமானப் பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்தக் கடன் அட்டையை வாங்கிப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு