Published:Updated:

ஓய்வுக்காலத்தில் நிலையான பென்ஷன் தரும் திட்டம்! புதிய அறிமுகம்...

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
பென்ஷன்

N E W S C H E M E S - சந்தைக்குப் புதுசு

ஓய்வுக்காலத்தில் நிலையான பென்ஷன் தரும் திட்டம்! புதிய அறிமுகம்...

N E W S C H E M E S - சந்தைக்குப் புதுசு

Published:Updated:
பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
பென்ஷன்

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சில...

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபிளெக்சிகேப் ஃபண்ட்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஜூலை 12-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடையவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஓய்வுக்காலத்தில் நிலையான பென்ஷன் தரும் திட்டம்! புதிய அறிமுகம்...

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் மைக்ரோ பச்சத் பிளான்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பாரம்பர்ய வகையில் வரும் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளருக்கு திட்டக் காலம் முழுவதும் காப்பீட்டின் பலன் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்த ஐந்து ஆண்டுகள் கழித்து காப்பீட்டிலிருந்து கடன் பெறும் வசதியும் உள்ளது. பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டத்தில் (Endowment policy) சேர நினைப்பவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.டி.ஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட்

ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கடன் பத்திரங்கள் மற்றும் பிற பணச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஜூலை 9 வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதுபோன்ற திட்டங்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சராசரியாக 8 முதல் 9 சதவிகித வருமானத்தைத் தந்திருக்கின்றன.

ரிஸ்க் குறைவான இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டை விட அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல்: நிச்சய பென்ஷன் திட்டம்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், நிச்சய பென்ஷன் வருமானம் அளிக்கும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒரு முறை பிரீமியம் தொகை செலுத்தினால் கூட ஆயுள் முழுவதும் பென்ஷன் தொகை கிடைக்கும்.

பென்ஷன் தொகை ஒவ்வொரு மாதமோ, காலாண்டுக்கு ஒரு முறையோ, 6 மாதத்துக்கு ஒரு முறையோ, வருடத்துக்கு ஒரு முறையோ வழங்கப்படும்.

ஓய்வுக்காலத்துக்கு நிலையான பென்ஷன் பெறுவதற்கு இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஹிராநந்தினி விர்ச்சுவல் சேல்ஸ் ஆபீஸ்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக வீடு தேடும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாக ஃபிளாட்டை தேர்வு செய்ய உதவும் விர்ச்சுவல் வலைதளத்தை ஹிராநந்தினி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதைப் பயன்படுத்தி வாடிக்கை யாளர்கள் தமக்கு விருப்பமான வீட்டை வீட்டிலிருந்தபடியே 360 டிகிரி சுற்றிப் பார்த்து வாங்க முடியும்.

முதற்கட்டமாக சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள வீடுகளை வாடிக்கையாளர்கள் இந்த விர்ச்சுவல் டூர் மூலம் பார்க்க முடியும். இந்த வசதி காரணமாக வீட்டிலிருந்தபடியே நமக்குப் பிடித்த வீட்டைத் தேர்வு செய்து வாங்க முடியும்.