Published:Updated:

சினிமா ரசிகர்களுக்கு உதவும் புதிய கடன் அட்டை!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சினிமா ரசிகர்களுக்கு உதவும் புதிய கடன் அட்டை!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

கோட்டக் மஹிந்திரா பேங்க் தரும் புதிய கடன் அட்டை...

தற்போது 60% திரைப்பட டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைக் கொண்டு முன்பதிவு செய்யப்படு கிறது. அவர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் இந்தப் புதிய கடன் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கடன் அட்டை மூலம் பி.வி.ஆர் சினிமாஸ் குழும திரையரங்கு களில் வெளியிடப்படும் திரைப்படத்துக்கு டிக்கெட் புக் செய்யும்போது கூடுதல் ரிவார்டு பாயின்ட்டுகள் கிடைக்கும். அந்த ரிவார்டு புள்ளிகளைப் பயன்படுத்தி இலவச மூவி டிக்கெட் பெறலாம்.

மேலும், மாதம்தோறும் இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டு அடிப்படையிலும், இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப் பிக்கும்போதும் இலவச மூவி டிக்கெட்டுகளும் கிடைக்கும். திரைப்பட விரும்பிகள் இந்தப் புதிய கடன் அட்டையை வாங்கிக்கொள்ளலாம்.

சினிமா ரசிகர்களுக்கு உதவும் புதிய கடன் அட்டை!

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் சஞ்சய் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (HDFC Life Sanjay Fixed Maturity Plan)

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனம் குறிப்பிட்ட காலத்தை முதிர்வுத் தொகையாகக் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கை யாளர் விருப்பத்துக்கிணங்க முதலீட்டுக் காலம், முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டு முறைகளை மாற்றியமைக்க முடியும்.

ஒரே முறையிலும் அல்லது குறிப்பிட்ட கால அளவுகளிலும் வாடிக்கையாளரின் விருப்பத்துக்குப் பணத்தை முதலீடு செய்யும் வசதி உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ள இந்தத் திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Adithya Birla Business Cycle Fund)

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் நவம்பர் 29-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால சுழற்சியில் சிறப்பாகச் செயல்படும். அதைக் கண்டறிந்து ஏறும் சந்தை சுழற்சியில் முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலீடு செய்யப்படும் தொகை முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.டி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் (ITI Banking and Financial Services Fund)

ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வங்கி மற்றும் பிற நிதி தொடர்பான நிறுவனங் களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 29 வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

பொதுவாக, செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை. அதனால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்: ஸ்டிரஸ் பேஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்...

சாம்கோ நிறுவனம் பிரத்யேக கணினி மயமாக்கப்பட்ட முறையில் நிறுவனங்களைப் பகுப்பாய்வு செய்து முதலீடு செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

தற்போது நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஸ்டிரஸ் டெஸ்ட் முதலீட்டில் (Stress Tested Investing) தேறியுள்ளதாக சாம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நல்ல நிறுவனப் பங்குகளை இந்த முறை மூலம் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நிறுவனத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளது. ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism