Published:Updated:

ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்ட் (Axis Multicap Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டமான ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிசம்பர் 10 வரை சேரலாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். மாதம் தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஹெச்.டி.எஃப்.சி மல்ட்டிகேப் ஃபண்ட் (HDFC Multicap Fund)

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் புதிய மல்ட்டிகேப் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிசம்பர் 7 வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பங்குச் சந்தை குறியீடுகள் சற்றுக் குறைந்துள்ள நிலையில் இது மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தைத் தரும்.

ரிஸ்க் எடுப்பவர்களுக்கான புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

நிப்பான் இந்தியா தாய்வான் ஈக்விட்டி ஃபண்ட் (Nippon India Taiwan India Equity Fund)

உலகமயமாக்கலின் வளர்ச்சி, பிற வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்வதை சுலபமாக்கி வருகிறது. இதன் காரணமாக இந்திய முதலீட் டாளர்கள் வெளிநாட்டுச் சந்தையில் அதிக முதலீடு செய்துவருகின்றனர். அதற்கு உதவிடும் வகையில் ஆசியாவின் வளரும் தைவான் சந்தையில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் டிசம்பர் 6 வரை சேர முடியும். இந்தத் திட்டம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், வெளி நாடுகளில் முதலீடு செய்யும்போது கரன்சி மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்களும் முதலீட்டில் மாற்றத்தைக் கொடுக்கும். அதனால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் இன்கம் பிளான் (MaxLife Smart Wealth Income Plan)

காப்பீட்டுத் துறையில் முன்னணி நிறுவன மான மேக்ஸ் லைஃப் பாரம்பர்ய வகை புதிய காப்பீட்டுத் திட்டத்தை மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் இன்கம் பிளான் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் நிச்சய வருமானம் கிடைக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மணிபேக் பெறும் வசதியும் உள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் டிரான்சிட் கார்டு

பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கார்டைப் பயன்படுத்தி பேருந்துகள், மெட்ரோ ரயில் பயணம், பார்க்கிங் கட்டணம் போன்றவற்றை மேற் கொள்ள முடியும். மேலும், பிற கடன் அட்டை களைப் போல் இதைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஒரு நாடு, ஒரு கடன் அட்டை என்ற கோட்பாட்டைக் கருத்தில்கொண்டு இந்தக் கடன் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பாஸ்ட் டாக் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்தப் புதிய அறிமுகமும் பெரும்பாலான நபர்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism