Published:Updated:

நிச்சய வருமானம் தரும் பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டம்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான சில திட்டங்களைப் பார்ப்போம்.

கோட்டக் நிஃப்டி ஆல்பா 50 இ.டி.எஃப் (Kotak Nifty Alpha 50 ETF)

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியாவின் முதல் ஆல்பா வகை முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப் பிட்ட கால அளவில் நிறுவனங்கள் அதன் குறியீட்டைவிட அதிகமாக அல்லது குறைவாக வருமானம் தந்திருப்பதையே ஆல்பா ஆகும்.

உதாரணமாக, நிஃப்டி 50 குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 1% அதிகரித்திருக்கிறது எனில், அதில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கு விலை அந்தக் காலகட்டத்தில் 2% அதிகரித்திருந்தால், அந்த நிறுவனத்தின் ஆல்பா +1%. அதற்கு மாறாக, ஹீரோ மோட் டோகார்ப் நிறுவனப் பங்கு விலை 1% குறைந் திருந்தால், அதன் ஆல்பா அளவானது -2% ஆகும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி அதிக ஆல்பா அளவு கொண்ட 50 நிறுவனங் களில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் டிசம்பர் 15 வரை முதலீடு செய்யலாம்.

முன்பு அதிக வருமானம் தந்துள்ளது என்பதற்காக வரும் காலத்தில் அதே அளவு வருமானம் ஒரு நிறுவனத்தின் பங்கில் கிடைக்கும் எனக் கூற முடியாது. மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் இதில் சேரலாம்.

டி.எஸ்.பி 50 நிஃப்டி இ.டி.எஃப் (DSP 50 Nifty ETF)

டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 50 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை பேசிவ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் டிசம்பர் 17 வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேரலாம்.

நிச்சய வருமானம் தரும் பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டம்..!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty Midcap 150 Index Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி மிட்கேப் 150 குறியீட்டில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குறியீட்டில் நடுத்தர மதிப்புடைய நிறுவனங் களில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் டிசம்பர் 17-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.பேசிவ் வகை திட்டங்களை நிர்வகிக்க ஆகும். செலவு குறைவாக இருப்பதால் இந்தத் திட்டங் களில் நிர்வாகச் செலவு குறைவாக இருக்கும். என்றாலும், மிட்கேப் வகை திட்டங்கள் சற்று ரிஸ்க் அதிகம் உடையவை. ஆதலால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கேரன்டீட் இன்கம் ஃபார் டுமாரோ (ICICI Prudential Guaranteed Income for Tomorrow)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நிச்சய வருமானம் வழங்கும் பாரம்பர்ய வகை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்ட காலம் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பர்ய வகை காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.