Published:Updated:

மனநோய் சிகிச்சைகளுக்கும் க்ளெய்ம்... புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

எல்.ஐ.சி வழங்கும் தன் ரேகா திட்டம் (Dhan Rekha Plan)

இந்தியாவின் ஒரே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இது, தன் ரேகா என்கிற பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பிரீமியம் தொகையை ஒரு முறை மட்டும் செலுத்தி பாலிசி எடுக்கலாம். அல்லது வழக்கமாக பிரீமியம் செலுத்தும் வகையில் 10, 15, 20 ஆண்டுகளுக்கும் பாலிசி எடுக்கலாம்.

பெண்களுக்கு பிரீமியம் தொகையில் சலுகை உண்டு. மாற்றுப் பாலினத்தவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இந்தத் திட்டக் காலம் முடிவடைந்த பிறகு, நிச்சயமான வருமானம் கிடைக்கும். பிரீமியம் செலுத்திய ஆறாவது ஆண்டு முதல் நிச்சயமான போனஸ் தொகையும் கிடைக்கும் என்பது சிறப்பு. ஆயுள் காப்பீட்டுடன் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் வேறு சில ஆப்ஷனல் ரைடர் திட்டங்களிலும் சேர முடியும். பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டத்தில் சேர விருப்பம் உடையவர் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மனநோய் சிகிச்சைகளுக்கும் க்ளெய்ம்... புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!

மஹிந்திரா மேனு லைஃப் பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்ட் (Mahindra Manulife Balanced Advantage Fund)

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் பிற பணப் பத்திரங்களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய வகை ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத் திற்கேற்ப முதலீடுகள் மாற்றி அமைக்கப்படு வதால், இந்தத் திட்டத்தில் ரிஸ்க் குறைவாகும்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 23 வரை முதலீடு செய்ய முடியும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீட்டிலிருந்து தொடங்கலாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

ஆதித்ய பிர்லா ஆக்டிவ் ஹெல்த் எஸென்ஷியல் பிளான் (Aditya Birla Activ Health Essential plan)

ஆதித்ய பிர்லா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பல வகை நோய்களுக்குத் திட்டம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இழப்பீடு கோர முடியும். வீட்டிலிருந்து சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கும் காப்பீடு எடுக்க முடியும். மனநோய் சிகிச்சைகளுக்கும் க்ளெய்ம் பெற முடியும். மருத்துவக் காப்பீடு தேவைப்படு பவர்கள் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் வழங்கும் என்.சி.டி திட்டம்

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரத்தை அறிமுகம் செய்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.1,000 கோடி வரை நிதி திரட்ட உள்ளது. இந்த என்.சி.டி-க்கு கிரைசில் ஏஏ/நிலையானது என்கிற தரக்குறியீட்டையும் பிரிக்வொர்க்ஸ் ரேட்டிங்ஸ் இந்தியா நிறுவனம் ஏஏ+ என்கிற தரக்குறியீட்டையும் வழங்கி யிருக்கிறது.

இதன் முதலீட்டுக் காலமாக 24, 36, 60 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 8.35% முதல் 9.26% வரை வருமானம் கிடைக்கும். வங்கி டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானம் கிடைக்கும் இந்தத் திட்டத்தில், மிதமான ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.