Published:Updated:

மாறிவரும் மருத்துவ சிகிச்சை... கைகொடுக்கும் பாலிசி திட்டங்கள்!

மருத்துவ பாலிசி
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ பாலிசி

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் புதிதாக அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பாசிவ் மல்ட்டி அஸெட் ஃபண்ட் (ICICI Prudential Passive Multi Asset Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம், வெளிநாட்டு பங்குச் சந்தைகள் ஆகிய பல வகைகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

இதில் செய்யப்படும் முதலீடுகள் பல்வேறு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவ தால், ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் பேசிவ் வகையில் முன்னணிக் குறியீடுகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். அதனால் இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் செலவு குறைகிறது. குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்த முதலீட்டைத் தொடங்கலாம். மிதமான ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மாறிவரும் மருத்துவ சிகிச்சை...
கைகொடுக்கும் பாலிசி திட்டங்கள்!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்: ஹெல்த் ரைடர் திட்டம்

மருத்துவர்களுடன் டெலி கன்சல்டிங் பெறும் வசதி, நேரடியாக மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெறும் வசதி, ஆண்டுதோறும் ஹெல்த் செக்கப் பெறும் வசதி மற்றும் நோய்க்கான பிற பரிசோதனை வழங்கும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய ரைடர் திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த அடிஷனல் ரைடர் பாலிசியில் சேர்ந்து பயன் பெறலாம். இதன் மூலம் கூடுதலாக வாடிக்கையாளருக்கு இந்த நான்கு வசதிகளும் கிடைக்கும்.

ஆக்ஸிஸ் டைரக்ட்: டிஜி டாக்ஸ்

ஆக்ஸிஸ் டைரக்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் சுலபமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்யும் நிறுவனர்கள் எளிதாக வரித் தாக்கல் செய்வதற்கு இந்த வசதி உதவும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். டிஜி ப்ளஸ் என்ற திட்டத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் மற்றும் நிதித்துறை சார்ந்த நிபுணர்களின் உதவி பெறும் வசதியும் உள்ளது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்: 9 புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

காப்பீட்டுத் துறையில் மாறிவரும் மருத்துவ சிகிச்சை முறைக்கு உதவும் வகையில் 9 புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு காப்பீட்டுக் கான அமைப்பான ஐ.ஆ.ர்.டி.ஏ.ஐ அனுமதி அளித்துள்ளது. இந்த ஒன்பது திட்டங்களில் மூன்று திட்டங்கள் வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலம் மருத்துவ சிகிச்சை பெறும் திட்டங்களாகும். மீதமுள்ள ஆறு திட்டங்களும் மாறிவரும் மருத்துவ சிகிச்சை முறைக்கேற்ப புதிய வசதிகளை உள்ளடக்கிய தாக இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனத்துடன் கைகோக்கும் க்ளோவ் டென்டல்

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனம் தன் வாடிக்கை யாளர்களுக்கு பல் சிகிச்சை வழங்கும் திட்டத்துக்காக நாட்டில் முன்னணி டென்டல் துறை சார்ந்த நிறுவனமான க்ளோவ் டென்டல் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் பல பகுதிகளில் உள்ள க்ளோவ் டென்டல் சிகிச்சை மையத்துக்கு சென்று வாடிக்கையாளர்கள் சிகிச்சை பெற முடியும்.