Published:Updated:

வெள்ளி வாங்க விரும்புகிறவர்களுக்கு கைகொடுக்கும் சில்வர் இ.டி.எஃப்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி ஆட்டோ இ.டி.எஃப் (ICICI Prudential Nifty Auto ETF)

இந்தியாவில் முதல் முறையாக நிஃப்டி ஆட்டோ (Nifty Auto) குறியீட்டில் பாசிவ் முறையில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

கடந்த 11 ஆண்டுகளில் 7 ஆண்டுகளில் நிஃப்டி ஆட்டோ குறியீடு, நிஃப்டி குறியீட்டை விட அதிக வருமானத்தைத் தந்துள்ளது. இத்துறை சார்ந்த பங்குகள் கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாகக் குறைவான வருமானத்தைத் தந்திருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகைக்குப் பிறகு, இத்துறை அதிக வளர்ச்சி வாய்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆட்டோ துறையில் பெரிய நிறுவனப் பங்குகள் சந்தை இறக்கம் காரணமாகக் குறைவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் இந்தப் பங்குகள் அதிக வருமானம் தர வாய்ப்புண்டு.

எனினும், செக்டோரல் துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் நிஃப்டி ஆட்டோ குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 14-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். ரூ.1,000 முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

வெள்ளி வாங்க விரும்புகிறவர்களுக்கு கைகொடுக்கும் சில்வர் இ.டி.எஃப்..!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் சில்வர் இ.டி.எஃப் (ICICI Prudential Silver ETF)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், வெள்ளியில் முதலீடு செய்யும் சில்வர் இ.டி.எஃப் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் யூனிட் மதிப்பு, வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப மாறுபடும். ஜனவரி 19-ம் தேதி வரைக்கும் இதில் முதலீடு செய்யலாம். இது இந்தியாவின் முதல் சில்வர் இ.டி.எஃப் ஆகும். குறைந்தபட்ச முதலீடு ரூ.100.

தங்கத்தோடு ஒப்பிடும்போது வெள்ளிக்கு தொழிற் சாலை சார்ந்த பயன்பாடுகள் அதிகம் என்பதால், அதன் தேவை அதிகரிக்கக்கூடும். அப்போதுதான் அதன் விலை உயரலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுக் கலவையில் சுமார் 10% - 15% தொகையை சில்வர் இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம்.

முத்தூட் ஃபின்கார்ப்; என்.சி.டி திட்டம் (Muthoot Fincorp NCD Scheme)

திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத புதிய கடன் பத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் 10 விருப்பங் களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 27 மாதங்கள் முதல் 72 மாதங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுக்கு 9% வரை வருமானம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைவான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் வேண்டுபவர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

வங்கி லாக்கர் சேதத்துக்கு இழப்பீடு - ஆர்.பி.ஐ உத்தரவு

தற்போது வங்கி லாக்கரில் உள்ள பொருள்களுக்கு பல்வேறு காரணங்கள் காரணமாக சேதம் ஏற்பட்டால் வங்கிகள் இழப்பீடு எதுவும் வழங்கு வதில்லை. தற்போது வங்கிகளின் தவறுகள் காரணமாக லாக்கருக்கு சேதம் ஏற்பட்டால் வருடாந்தர லாக்கர் கட்டணத்தைப் போன்று நூறு மடங்கு இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

திருட்டு, தீ விபத்து, வெள்ளம் போன்ற இயற்கை சேதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் லாக்கருக்கு சேதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய உத்தரவு காரணமாக இனி இழப்பீடு கிடைக்கும். மேலும், லாக்கர் ஒதுக்கீட்டை வெளிப்படைத்தன்மை யுடன் வங்கிகள் செய்ய வேண்டும் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. காலி யாக உள்ள லாக்கர் விவரங்களைப் பொதுவெளியில் வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் புதிய லாக்கர் வேண்டுபவர்களுக்கு விரைவாக லாக்கர் கிடைக்க வாய்ப்புள்ளது.