Published:Updated:

பிரீமியம் திரும்பக் கிடைக்கும் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மைக் காலத்தில் சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Axis Nifty Next 50 Index Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 21-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்கலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் முதலீடு செய்யப்படுவதால், இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் செலவு குறைவு. என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படும் திட்டம் என்பதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

ஆக்ஸிஸ் சி.பி.எஸ்.இ ப்ளஸ் எஸ்.டி.எல் 2025 70:30 டெப்ட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Axis CPSE Plus STL 2025 70:30 Debt Index Fund)

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ரிஸ்க் குறைவான முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 20-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். ரிஸ்க் குறைவான இந்தத் திட்டத்தில் வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மிதமான ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் சில்வர் இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புதிய சில்வர் இ.டி.எஃப் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இந்தத் திட்டங்களில் ஜனவரி 27-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். சில்வர் இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய டீமேட் கணக்குத் தேவை. ஆனால், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்களில் சேர டீமேட் கணக்குத் தேவையில்லை. முதலீட்டுக் கலவையின் ஒரு பகுதியாக வெள்ளியில் முதலீடு செய்யும் எண்ணம் உடையவர்கள் இந்தப் புதிய திட்டங்களில் சேர்ந்து பயன் பெறலாம்.

பிரீமியம் திரும்பக் கிடைக்கும் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்!

சாம்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Samco Flexi Cap Fund)

சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சாம்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங் களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டு வளர்ச்சியைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ள ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்ட் இதுவாகும். இதில் திரட்டப்படும் நிதியில் 65% இந்திய நிறுவனப் பங்குகளிலும், 35% உலகளாவிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.

புதிய ஃபண்ட் வெளியீடு ஜனவரி 17 அன்று தொடங்கி ஜனவரி 31 அன்று நிறைவு பெறுகிறது. இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூ ரன்ஸ்: புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஐபுரடக்ட் ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம் என்கிற புதிய டேர்ம் இன்ஷூ ரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை திட்டக் காலத்துக்குப் பிறகு, 105 சதவிகிதமாகத் திரும்ப கிடைக்கும்.

மேலும், 64 விதமான வியாதிகளுக்கு மருத்து வக் காப்பீடு கிடைக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் நிச்சய வருமானம் என்ற இரட்டை பலன்களை வழங்கும் ஹைபிரிட் திட்டமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் லைஃப் ஸ்டேஜ் கவர் மற்றும் லெவல் கவர் என்பதாக இரண்டு வகையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவைப்படுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெற பரிசீலிக்கலாம்!