Published:Updated:

அதிக ரிஸ்க் உள்ள புதிய ஃபண்ட் திட்டங்கள்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

அதிக ரிஸ்க் உள்ள புதிய ஃபண்ட் திட்டங்கள்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஸ்ட்ராடஜிக் மெட்டல் அண்ட் எனர்ஜி ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (ICICI Prudential Strategic Metal and Energy Fund of Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஃபர்ஸ்ட் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் நிறுவனம், 147 பில்லியன் டாலர் அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகித்து வருகிறது.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் இல்லை. ஓராண்டுக் குள் வெளியேறினால் 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் செய்யப்படும் முதலீடு எனர்ஜி மற்றும் மெட்டல் துறை சார்ந்த திட்டங்களில் பெரும்பகுதி முதலீடு செய்யப்படும். குறைந்த அளவு கடன் திட்டங்களில் முதலீடு மேற் கொள்ளப்படும். முதலீடு செய்யப்படும் பெரும் பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதிக ரிஸ்க் உள்ள புதிய ஃபண்ட் திட்டங்கள்!

நவி நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Bank Index Fund)

நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பேங்க் நிஃப்டி குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக பேங்க் நிஃப்டி ஒப்பீட்டளவில் பிற குறியீடுகளைவிட குறைந்த வருமானத்தை வழங்கியுள்ளது. கொரோனா காரணமாக வங்கித் துறை பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

வருங்காலத்தில் வங்கித் துறை பொருளாதார வளர்ச்சி காரணமாக அதிக ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பம் உள்ள முதலீட் டாளர்கள் நவி மியூச்சுவல் பண்ட் நிறுவனம் வழங்கும் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

என்றாலும் செக்டோரல் துறை சார்ந்த திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை. ஆகையால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.

இன்வெஸ்கோ இந்தியா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் (Invesco India Flexicap Fund)

இன்வெஸ்கோ இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய ஃப்ளெக்ஸிகேப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யப்படும் ஒரு வகை திட்டமே ஃப்ளெக்ஸிகேப் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளும் வசதியும் உள்ளது.

முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட் டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் ஆசியாவின் முதல் கிரிப்டோகரன்சி இ.டி.எஃப்

கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களி டையே அதிகரித்து வருகிறது. அந்த முதலீட்டுட்த் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் குஜராத் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் ஆசியாவின் முதல் கிரிப்டோகரன்சி இ.டி.எஃப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தத் திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை யைச் சேர்ந்த டோரஸ் க்ளிங் பிளாக்செயின் நிறுவனம் ஐ.என்.எக்ஸுடன் இணைந்து இதைத் தொடங்கவுள்ளன.

பிட்காயினில் நேரடியாக பணம் போட விரும்பாதவர்கள் இதில் சேர பரிசீலிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism