Published:Updated:

அதிக ரிஸ்க்... அதிக வருமானம்... அறிமுகமாகும் குளோபல் ஃபண்ட்!

குளோபல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
குளோபல் ஃபண்ட்

சந்தைக்குப் புதுசு

அதிக ரிஸ்க்... அதிக வருமானம்... அறிமுகமாகும் குளோபல் ஃபண்ட்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
குளோபல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
குளோபல் ஃபண்ட்

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

டி.எஸ்.பி குளோபல் இன்னோவேஷன் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (DSP Global Innovation Fund of Fund)

டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வெளிநாடுகளில் உள்ள முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். இதில் பிப்ரவரி 7-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதனால், வெளிநாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவது மற்றும் வெளிநாட்டு கரன்சிகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை காரணமாக இந்தத் திட்டம் அதிக ரிஸ்க் உடையதாகும். அதனால் ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

அதிக ரிஸ்க்... அதிக வருமானம்...
அறிமுகமாகும் குளோபல் ஃபண்ட்!

மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 200 மொமென்டம் 30 இ.டி.எஃப் (Motilal Oswal Nifty 200 Momentum 30 ETF)

நிஃப்டி 200 மொமென்டம் 30 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகையான திட்டத்தை மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பேசிவ் வகை திட்டம். இதில் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism