சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Aditya Birla Sun Life Nifty Next 50 Index Fund)
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
இது ஒரு பேசிவ் வகை திட்டமாகும். குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் இதில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி வசதியும் உள்ளது. இது ஒரு பேசிவ் வகைத் திட்டம் என்பதால், இதை நிர்வகிக்க ஆகும் செலவு குறைவு. என்றாலும் முழுவதும் பங்குச் சந்தை முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
நவி யூ.எஸ் டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Navi US Total Stock Market Fund of Fund)
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி திட்டமான வான்கார்டு டோட்டல் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நிறுவனங்களில் இந்தத் திட்டம் முதலீடு செய்யும். வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங் களிலும் கலந்து முதலீடு செய்யும் திட்டமாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 18-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கும் ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் பிரீமியர் பிளான் (Aditya Birla Active Health Platinum Premiere Plan)
ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நமது நாட்டிலும், வெளிநாட்டிலும் சிகிச்சை பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பாலிசியைப் பயன்படுத்தி வெளிநாடு செல்லும்போது அந்தந்த நாடுகளில் மருத்துவக் காப்பீடு பெறுவது இதன் சிறப்பு.
இந்தத் திட்டத்தில் சிகிச்சைக்கு முந்தைய மருத்துவச் செலவுகளுக்கும் காப்பீடு கோர முடியும். இந்தத் திட்டம் 18 முக்கிய வியாதிகளுக்கு சிகிச்சை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு அந்த நாட்டுக்குச் சென்ற முதல் நாளில் இருந்து காப்பீடு நடைமுறைக்கு வந்துவிடும். மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை களுக்கு உறுப்பு தானம் செய்யும் நபர் களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கும் காப்பீடு கோர முடியும். அதனால், வெளிநாடு பயணப்படும் வாடிக்கை யாளர்கள் ஆதித்ய பிர்லா காப்பீட்டு நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
எல்.ஐ.சி-யின் ஜீவன் அக்ஷய் VII, நியூ ஜீவன் சாந்தி: ஆண்டளிப்பு விகிதம் அதிகரிப்பு
எல்.ஐ.சி அதன், ஜீவன் அக்ஷய் VII, நியூ ஜீவன் சாந்தி பாலிசிகளில் ஆண்டளிப்பு விகிதத்தை அதிகரித்து உள்ளது. இது 2022 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த இரு திட்டங்களை ஆன்லைன் மூலமும் வாங்க முடியும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் & பதஞ்சலி: புதிய ரூபே கடன் அட்டை
பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிமுகப் படுத்தியுள்ள இந்தப் புதிய கடன் அட்டையைப் பயன்படுத்தி நமது நாட்டில் உள்ள அனைத்து பதஞ்சலி ஸ்டோர்களிலும் ரூ.2,500-க்குமேல் பொருள்கள் வாங்கும்போது 2% கேஷ் பேக் கிடைக்கும். இந்த கடன் அட்டை ரூபே பிளாட்டினம் மற்றும் ரூபே செலக்ட் என்று இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் கடன் அட்டையை உபயோகப் படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் அளவுக்கு விபத்து காப்பீடு மற்றும் நிரந்தர உடல் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்கும். மேலும், விமானப் பயணங்களில் லஞ்ச் வசதி, கூடுதல் ரிவார்டு பாயின்டுகள் போன்ற பல சலுகைகள் இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது கிடைக்கும்.
புதிதாகக் கடன் அட்டை தேவைப்படுபவர்கள் பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.