Published:Updated:

இரண்டு வகைகளில் வருமானம்... புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

இரண்டு வகைகளில் வருமானம்... புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்த திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.டி.எஃப்.சி நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் (IDFC Nifty 100 Index Fund)

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 100 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 18-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் சேரலாம். எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. பேசிவ் வகை திட்டங்களை நிர்வகிக்க ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இரண்டு வகைகளில் வருமானம்... 
புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!

ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் (HDFC Nifty Equal Weight Index Fund)

நிஃப்டி 100 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய பேசிவ் வகை திட்டத்தை ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக நிஃப்டி குறியீட்டில் இடம்பெறும் நிறுவனங்களின் வெயிட் டேஜுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் முதலீடு மாறும். ஆனால், இந்தத் திட்டத்தில் நிஃப்டி 100 குறியீட்டில் உள்ள அனைத்து நிறுவனங் களிலும் ஒரே அளவு முதலீடு மேற்கொள்ளப் படும். இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 18-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்திலும் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.

ஆக்ஸிஸ் ஈக்விட்டி இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Axis Equity ETF Fund of Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பலவகை ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய பேசிவ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 18 -ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டமும் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய வெளியீட் டாளர்கள் மற்றும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எக்சைட் லைஃப் ஸ்மார்ட் இன்கம் பிளான் (Exide Life Smart Income Plan)

எக்சைட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், புதிய வகை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பாலிசி காலத்தில் வருமானம் கொடுப்பது அல்லது பாலிசி முடிவடைந்த பிறகு, அதிக முதிர்வு பணம் வழங்குவது என்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இந்தத் திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். இது பங்குச் சந்தையில் முதலீடு செய்யாத பாரம்பர்ய வகை திட்டமாகும். ரிஸ்க் குறைவான காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் எக்சைட் லைஃப் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

ஏர்டெல் பேமென்ட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட்: சைபர் இன்ஷூரன்ஸ் திட்டம்

டிஜிட்டல் தொழில்நுட்ப வருகைக் குப் பிறகு, நூதன முறையில் ஆன்லைன் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளில் சிக்கி பணம் இழப்பது அதிகரித்து வருகிறது. இந்த மோசடி களில் இருந்து காப்பதற்கு ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனம் சைபர் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் எளிதில் பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் காத்திருக்கும் காலம் எதுவும் கிடையாது. மோசடி நடை பெற்ற 90 நாள்களுக்குள் புகார் தெரிவித்திருந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அனைத்து விதமான ஆன்லைன் மோசடிகளிலிருந்தும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பாதுகாப்பு அளிக்கும். அதனால் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.