Published:Updated:

பரிசளிக்க ஏற்ற புதிய காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

பரிசளிக்க ஏற்ற புதிய காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் நிஃப்டி ஸ்மால்கேப் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Axis Nifty Small Cap 50 Index Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஸ்மால்கேப் நிறுவனங் களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மார்ச் 7-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஸ்மால்கேப் வகை திட்டங்கள் மிக அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐ.டி.ஐ கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட் (ITI Conservative Hybrid Fund)

ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரிஸ்க் குறைவான கடன் பத்திரங்கள் மற்றும் பிறவகை திட்டங்களில் முதலீடு செய்யும் பாரம்பர்ய வகை முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியைவிட அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்தத் திட்டத்தில் மார்ச் 7-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். குறைவான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தமது முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பரிசளிக்க ஏற்ற புதிய காப்பீட்டுத் திட்டம்!

நவி நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Mid Cap 150 Index Fund)

நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மிட் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இந்தத் திட்டத்தில் மார்ச் 2-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. மிட்கேப் பங்குகள் சற்று ரிஸ்க் அதிகம் உடையவை. அதனால் ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஃப்யூச்சர் ஜெனரலி கிஃப்ட் ஆஃப் ஹெல்த் (Future GeneralI Gift of Health)

ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனம் காப்பீட்டுத் திட்டங்களை விருப்பமான நபர்களுக்கு பரிசாகத் தரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிமுகம் செய்துள்ள புதிய விதிமுறைகளின் கீழ் காப்பீட்டுச் சேவையை நாம் விரும்பும் நபர்களுக்கு இலவசமாக வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தை தனிநபர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்தோ, தன்னிடம் பணிபுரியும் ஊழியர் களுக்கோ, என்.ஜி.ஓ-களில் பணிபுரிபவர் களுக்கோ என்று நமக்கு விருப்பமானவர்களுக்கு இலவசமாக காப்பீட்டை பரிசளிக்க முடியும்.

இந்தத் திட்டம் மருத்துவக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு என்று இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆண்டு பிரீமியம் ரூ.501 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காப்பீடு தேவைப்படுபவர்கள் இதில் சேரலாம்.