Published:Updated:

வியாபாரிகளுக்கு உதவும் புதிய கிரெடிட் கார்டு!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

வியாபாரிகளுக்கு உதவும் புதிய கிரெடிட் கார்டு!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

நவி நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty IT Index Fund)

நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்ந்த ஐ.டி குறியீட்டில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் மார்ச் 14-ம் தேதி வரை சேரலாம். ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து நல்ல லாபத்தை வழங்கி வருகிறது.

பொதுவாக, செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

நவி நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Navi Nasdaq 100 Fund of Fund)

வெளிநாட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதனால் பல நிறுவனங்கள் வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் குறிப்பாக, அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான நாஸ்டாக்கில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள் ளது. இந்தத் திட்டத்தில் மார்ச் 14-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்க முடியும்.

வெளிநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்யும்போது இந்திய ரூபாய்க்கான டாலரில் ஏற்படும் மாற்றங்களும் முதலீட்டில் மாற்றத் தைக் கொண்டுவரும். மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

வியாபாரிகளுக்கு உதவும் புதிய கிரெடிட் கார்டு!

யூனியன் எம்.எஸ்.எம்.இ ரூபே கிரெடிட் கார்டு (Union MSME RuPay Credit Card)

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் புதிய கடன் அட்டையை யூனியன் வங்கி மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி நிறுவனத் துக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இதை எளிமையாக மாதாந்தரக் கடன்களாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும், இந்தக் கடன் அட்டை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை விபத்துக் காப்பீடு கிடைக்கும். கடன் அட்டை தேவைப்படும் சிறு வியாபாரிகள் இந்தப் புது கடன் அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஜே.எம் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (JM Corporate Bond Fund)

நிலையான வருமானம் தரும் கார்ப்பரேட் பாத்திரங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை ஜே.எம் ஃபைனான்ஷியல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் மார்ச் 7-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். ரிஸ்க் குறைவான இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளும்போது வங்கி டெபாசிட்டுகளைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஐ.டி.ஐ கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட் (ITI Conservative Hybrid Fund)

நிலையான வருமானம் தரும் கடன் பத்திரம் மற்றும் இதர பண முதலீடுத் திட்டத்தில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை ஐ.டி.ஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளமுடியும்.

இந்தத் திட்டத்தில் மார்ச் 7-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். ரிஸ்க் குறைவான இந்தத் திட்டத் தில் முதலீட்டை மேற்கொள்ளும் போது வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.