Published:Updated:

ரயில் பயணங்களுக்கு உதவும் புதிய கடன் அட்டைகள்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

ரயில் பயணங்களுக்கு உதவும் புதிய கடன் அட்டைகள்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

மோதிலால் ஆஸ்வால் எஸ் அண்ட் பி 50 லோ வாலட்டலிட்டி இண்டெக்ஸ் (Mothilal Oswal S&P 50 Low Volatility Index Fund)

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் எஸ் அண்ட் பி 50 குறியீட்டில் உள்ள நிறுவனங் களில் குறைந்த ஏற்றத்தாழ்வு கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் புதிய வகையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் மார்ச் 16-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்த பட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற் கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ரயில் பயணங்களுக்கு உதவும் 
புதிய கடன் அட்டைகள்!

டாடா ஏ.ஐ.ஏ லைஃப் பார்ச்சூன் கேரன்டீட் பென்ஷன் திட்டம் (Tata AIA Life Fortune Guaranteed Pension Scheme)

டாடா ஏ.ஐ.ஏ நிறுவனம் நிச்சய பென்ஷன் வழங்கும் பாரம்பர்ய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு சேமிக்க முடியும். ஓய்வுக் காலத்துக்கு சேமிக்கும் பழக்கம் இந்திய மக்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து சேமித்து வருவதன் மூலம் ஒருவர் ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் பொருளாதாரச் சிரமங்கள் இல்லாமல் வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். அதனால் ஓய்வுக்காலத்துக்கான பென்ஷன் திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

டாடா நிஃப்டி இந்தியா டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (Tata Nifty India Digital Exchange Traded Fund)

நிஃப்டி இந்தியா டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் பேசிவ் வகை திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் குறைந்த பட்சமாக ரூ.5,000-த்திலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் மார்ச் 25-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் புதிய வகையான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நேரடியாகக் குறியீட்டில் முதலீடு செய்யப்படுவதால், இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் செலவு குறைவு. என்றாலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

பி.என்.பி மெட்லைஃப் கேரன்டீட் கோல் பிளான் (PNB Met life Guaranteed Goal Plan)

பி.என்.பி மெட்லைஃப் நிறுவனம், நிச்சய வருமானம் வழங்கும் பாதுகாப்பான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் பிரீமியம் செலுத்தலாம். பிரீமியம் செலுத்திய காலத்துக்குப் பிறகு, வாடிக்கையாளருக்கு நிச்சய வருமானம் தரப்படும். அவ்வாறு வருமானம் தேவைப்படவில்லை எனில், முதிர்வுக் காலத்தில் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. பாரம்பர்ய காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் பி.என்.பி மெட்லைஃப நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி, ஐ.ஆர்.சி.டி.சி இணைந்து வழங்கும் ரூபே கார்டுகள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி ரயில்வே டிக்கெட் புக் செய்ய உதவும் ஐ.ஆர்.சி.டி.சி-யுடன் இணைந்து ரூபே கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில்வே டிக்கெட் புக் செய்யும்போது கூடுதல் ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும். மேலும், இந்தக் கடன் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரயில்வே லவுஞ்ச்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகம் ரயில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கடன் அட்டையை வாங்கிப் பயன்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism