Published:Updated:

செல்லப் பிராணிகளைக் காக்கும் புதிய காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

செல்லப் பிராணிகளைக் காக்கும் புதிய காப்பீட்டுத் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கும் ஸ்டார் ஹெல்த்கேர் திட்டம்

மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பெண்களுக்கு பிரத்தியேக ஹெல்த்கேர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பெண் களுக்குத் தேவைப்படும் கூடுதல் மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, பேறுகால சிகிச்சைக் கட்டணங்கள், குழந்தை பெற்றுக்கொள்ள தேவைப்படும் சிகிச்சைக் கட்டணங்கள் போன்ற மருத்துவச் செலவுகளுக்கு காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.

18 முதல் 75 வயது வரை நிரம்பிய பெண்கள் அனைவரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். காப்பீடு தேவைப்படும் பெண்கள் மகளிருக்கான இந்தச் சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

கொசமட்டம் ஃபைனான்ஸ்: என்.சி.டி மார்ச் 2022 திட்டம்

கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட கொசமட்டம் ஃபைனான்ஸ் என்.சி.டி திட்டம் மூலம் ரூ.200 கோடி நிதி திரட்டுகிறது. ஒரு என்.சி.டி பத்திரத்தின் விலை ரூ.1,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 மாதங்கள் முதல் 88 மாதங்கள் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். 9% வரை வட்டியாகக் கிடைக்கும்.

வட்டித் தொகையை மாதம்தோறும் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட சற்றுக் கூடுதல் வருமானம் வேண்டுகிறவர்கள் மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

செல்லப் பிராணிகளைக் காக்கும்
புதிய காப்பீட்டுத் திட்டம்!

நாய்களுக்கான பிரத்தியேக ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம்

ஃப்யூச்சர் ஜெனரலி இன்ஷூரன்ஸ் நிறுவனம், டாக் ஹெல்த் கவர் என்கிற பிரத்தியேக காப்பீட்டுத் திட்டத்தை முதல் முறையாக நமது நாட்டில் நாய்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளுக்குக் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். நாய்களுக்கான அறுவைசிகிச்சை செலவு உட்பட அனைத்து மருத்துவச் செலவு களும் இந்தக் காப்பீட்டில் அடங்கும். மேலும், ரைடர் பாலிசியாக மருத்துவ ஆலோசனை கட்டணம், மருந்துக்கான செலவுகள் போன்றவைக்கும் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் இது போன்ற செல்லப் பிராணிகளுக்கான காப்பீட்டு திட்டங்கள் பல உள்ளன. தற்போது நமது நாட்டிலும் அது போன்ற காப்பீட்டு திட்டத்தை ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனம் தொடங்கி வைத்துள்ளது. அதனால் தமது செல்லப் பிராணிகளுக்குக் காப்பீடு தேவைப்படுபவர்கள் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

பேங்க் ஆஃப் பரோடா: விவசாயிகளுக்கு யூநாட்டி கார்டு

பேங்க் ஆஃப் பரோடா வங்கி சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட கிரெடிட் ஏஐ ஃபின்டெக் நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கான பிரத்தியேக கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாய பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். தற்போது இந்தத் திட்டம் கர்நாடகாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங் களுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism