Published:Updated:

பெண் தொழில்முனைவோர்களுக்கு உதவும் புதிய ப்ரீபெய்டு கார்டு அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

பெண் தொழில்முனைவோர்களுக்கு உதவும் புதிய ப்ரீபெய்டு கார்டு அறிமுகம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

யு.டி.ஐ நிஃப்டி மிட்கேப் 150 குவாலிடி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (UTI Nifty Midcap 150 Quality 50 Index Fund)

யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை முதலீட்டைத் தொடங்க முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

டைரக்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

நிவா பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கும் கேன்சர் பாலிசி

நிவா பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நடுத்தர வருமானம் உடைய குடும்பங்களுக்கு கேன்சர் நோய்க்கு எதிராகக் காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் பிரீமியம் தொகையாக 1,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று சிறியவர்கள் வரை இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்படுவர்.

கேன்சர் சிகிச்சைக்காக ஐந்து லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டின் மூலம் கிடைக்கும். குறைந்த பிரீமியத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கேன்சர் நோய்க்கு எதிராகக் காப்பீடு வழங்கும் இந்தப் புதிய திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.

பெண் தொழில்முனைவோர்களுக்கு உதவும் புதிய ப்ரீபெய்டு கார்டு அறிமுகம்!

மகிளா மணி பிரிபெய்டு கார்டு (Mahila Money Prepaid card)

குறுந்தொழில் செய்யும் பெண்களுக்கு பயனளிக்கும் மகிளா திட்டம் இது. தற்போது விசா மற்றும் டிரான்ஸ்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து புதிய பிரிபெய்டு அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி பெண் தொழில்முனைவோர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை எளிய முறையில் மேற்கொள்ள முடியும்.

நமது நாட்டில் 55% பெண்களிடம் ஆக்ட்டிவ்வான வங்கிக் கணக்குகள் இல்லை என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவர்களுக்கு இந்த அட்டை மிகுந்த பயனளிக்கும். மேலும், இந்த அட்டையைப் பயன்படுத்தி டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன் செய்யும்போது கேஷ்பேக், ரிவார்டு பாயின்டுகள் போன்ற பல கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

எமிரேட்ஸ் ஸ்கைவார்ட்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கிரெடிட் கார்டு
(Emirates Skywards ICICI Bank Credit Card)

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், முன்னணி விமான சேவை வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுடன் இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள் ளது. இந்தக் கடன் அட்டையைப் பயன் படுத்தி எமிரேட்ஸ் விமானச் சேவைகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2.5 ரிவார்டு பாயின்ட் கிடைக்கும். இந்தப்புள்ளி களைப் பயன்படுத்தி எமிரேட்ஸ் விமானத்தில் பல சலுகைகளைப் பெறலாம்.