பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

நாஸ்டாக் சந்தையில் முதலீடு செய்யும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஹவுஸிங் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் (ICICI Prudential Housing Opportunities Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் நேரடியான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் மட்டுமன்றி, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த மறைமுக நிறுவனங் களிலும் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, இந்தத் திட்டம் சிமென்ட், ஸ்டீல், பவர், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட நிறுவனங் களில் முதலீட்டை மேற்கொள்ளும்.

இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 13-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, தீமேட்டிக் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். மேலும், இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

நாஸ்டாக் சந்தையில் முதலீடு செய்யும்  ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம்..!

இன்வெஸ்கோ நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Invesco NASDAQ 100 Fund of Fund)

இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வம் இந்திய முதலீட்டாளர்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் நாஸ்டாக் குறியீட்டில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளும் இந்தத் திட்டம் அந்த வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

என்றாலும், வெளிநாட்டு முதலீடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு மாறுபாடு போன்ற பல காரணிகள் லாப விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஸ்டார் ஹெல்த் பிரீமியம் இன்ஷூரன்ஸ் பாலிசி (Star Health Premium Insurance Policy)

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கான பிரத்யேக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வயது முதிர்ந்தோர்களுக்கான அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பவர் களுக்கு ஹோம் கேர் சிகிச்சைகள், பிற காப்பீட்டுத் திட்டங்களில் பொதுவாக கவர் செய்யப்படாத மருத்துவ உபகரணங்களுக்கான சிகிச்சை செலவு போன்றவைக்கு இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் செய்ய முடியும்.

தனிநபர் பாலிசியாகவோ, கணவன் - மனைவி இணைந்த ஃப்ளோட்டர் பாலிசியாகவோ இந்தத் திட்டத்தில் எடுக்க முடியும். மருத்துவக் காப்பீடு தேவைப்படும் வயது முதிர்ந்தோர் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் & ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதிய கடன் அட்டை அறிமுகம்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்தப் புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை கடன் அட்டை எதுவும் வாங்காதவர்கள் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!