Published:Updated:

வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரும் என்.சி.டி..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரும் என்.சி.டி..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைக் காண்போம்.

கோட்டக் கன்சப்ஷன் இ.டி.எஃப் (Kotak Consumption ETF)

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கன்சப்ஷன் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய பேசிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்த பட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

தற்காப்புப் பங்குகள் என்று அழைக்கப்படும் குறைந்த ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட எஃப். எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவது இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும், பேசிவ் வகை திட்டங்களைப் பராமரிக்க ஆகும் செலவும் குறைவு.

என்றாலும் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரும் என்.சி.டி..!

யூ க்ரோ கேப்பிடல்: புதிய என்.சி.டி திட்டம்

யூ க்ரோ கேப்பிடல் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்.சி.டி) அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு அதிகபட்சமாக 10.4% முதல் 10.9% வரை வட்டி கிடைக்கும். முதலீட்டுக் காலமாக 18 முதல் 30 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதலீட்டுக்கான வட்டி வருமானத்தை மாதம்தோறும் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

மிதமான ரிஸ்க் உடைய இந்தக் கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு வங்கி டெபாசிட்டுகளுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தைவிட அதிகமாக இருக்கும். அதனால் சற்று ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஷாப்பர்ஸ் ஸ்டாப் வழங்கும் புதிய கடன் அட்டை

சில்லறை விற்பனை நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து இந்தப் புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஃபர்ஸ்ட் சிட்டிசன் என்று ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத் துக்கு 80 லட்சம் முக்கிய வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கு முன்பு ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம் சிட்டி பேங்குடன் இணைந்து கடன் அட்டை வழங்கிவந்தது. சிட்டி பேங்கை ஆக்ஸிஸ் பேங்க் கையகப்படுத்திய பிறகு, ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் அந்த நிறுவனம் தற்போது இணைந்துள்ளது. இந்தப் புதிய கடன் அட்டையைக் கொண்டு ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தில் பொருள்கள் வாங்கும் போது பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

நேபாளத்தில் அறிமுகமாகும் ரூபே கார்டு

நமது நாட்டிலுள்ள ரூபே கார்டை நேபாளம் நாட்டில் அங்குள்ள எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ரூபே கடன் அட்டை பூடான், சிங்கப்பூர் மற்றும் அமீரக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேபாள் நாட்டையும் சேர்த்து நான்கு வெளிநாடுகளில் நமது ரூபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நேபாள் நாட்டில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எளிமையாகச் செய்வதற்கு இந்த அறிமுகம் பயன்படும். மேலும், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நேபாள நாட்டுக்கு சுற்றுலா செல்லும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் எளிமையாகத் தமது கார்டைக் கொண்டு அந்த நாட்டில் செலவழிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism