சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
கூகுள் பே-யின் புதிய கிரெடிட் கார்டு
கூகுள் பே நிறுவனம் குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கை யாளர்கள் கூகுள் பே ஆப் மூலம் அந்த நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள வங்கி களின் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம். வாடிக்கையாளரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த வாடிக்கை யாளர்களுக்கு மட்டும் புதிய கார்டு வழங்கப்படும்.
கூகுள் பிளே ஆப் மூலம் வழங்கப்படும் கடன் அட்டையை அந்த ஆப் மூலம் ரத்து செய்ய முடியாது. கடன் அட்டை வழங்கிய வங்கியைத் தொடர்புகொண்டு மட்டுமே அந்தக் கடன் அட்டையை ரத்து செய்ய முடியும். புதிய கடன் அட்டை வேண்டும் என வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சக்தி ஃபைனான்ஸ் அறிமுகம் செய்துள்ள என்.சி.டி திட்டம்:
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சக்தி ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத என்.சி.டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் மே 3 வரை முதலீடு செய்ய முடியும். ஒரு என்.சி.டி பத்திரத்தின் விலை ரூ.1,000 ஆகும். ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 10 பத்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்த முதலீட்டுக்கு 10% வரை வட்டி கிடைக்கும். 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பல வகைகளில் முதலீட்டாளர் தமது முதலீட்டை மேற்கொள்ளலாம். மாதம் தோறும் வட்டி பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் வேண்டும் வாடிக்கையாளர் சக்தி ஃபைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.