Published:Updated:

9% வரை வருமானம் தரும் புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

9% வரை வருமானம் தரும் புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

கனரா - ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆயுள் காப்பீடு: ஐ-செலக்ட் ஸ்மார்ட் 360 டேர்ம் பிளான் (iSelect Smart 360 plan)

இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் பாலிசி தாரர்களுக்கு 360 டிகிரியில் பலன்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டேர்ம் பிளான் எனில், பொதுவாக பாலிசிதாரர் மரணம் அடைந்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 40 கிரிட்டிக்கல் வியாதிகளுக்கான மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, நிரந்தர ஊனம் ஏற்பட்டால் காப்பீடு போன்ற 360 டிகிரியில் பல பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டு பலன்கள் வழங்குவதுதான் டேர்ம் பிளான் திட்டத்தின் சிறப்பாகும். அதனால் அதிக காப்பீடு தேவைப் படுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

9% வரை வருமானம் தரும் புதிய என்.சி.டி திட்டம்!

முத்தூட் மினி ஃபைனான்ஸ்: என்.சி.டி திட்டம்

முத்தூட் நிறுவனம், பங்குகளாக மாற்றிக் கொள்ள முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு, 125 கோடி ரூபாய் நிதி திரட்ட இருக்கிறது. ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 முதல் 5.5 ஆண்டுகள் வரையிலான காலத்தில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

இந்தத் திட்டத்தில் சேமிக்கும் தொகைக்கு 9% வரை வட்டி கிடைக்கும். மாதம்தோறும் வட்டி பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் பெற விரும்புவர்கள் முத்தூட் ஃபைனான்ஸ் வழங்கும் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

சாவரின் தங்கத் திட்டத்தில் பணமாக்கும் முறை

மத்திய ரிசர்வ் வங்கி சாவரின் தங்க நகை சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் தங்கநகை சேமிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இதன் திட்ட காலமாக எட்டு ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் காலம் வரைக்கும் இருந்தால் மூலதன ஆதாய வரி கிடையாது. அதே நேரத்தில், ஐந்து ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட்டத்திலிருந்து பணமாக்கிக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் தற்போது முடிவடைந்துவிட்டதால், முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் இ-குபேர் வலைதளத்தில் எவ்வாறு பணமாக்கிக்கொள்வது என்பதை அறிந்துகொள்ளலாம்.

எம்.எம்.டி.சி - பி.ஏ.எம்.பி வெளியிட்ட தங்க, வெள்ளி நாணயங்கள்!

மத்திய அரசுக்குச் சொந்தமான மினரல்ஸ்& மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் ஸ்விட்சர்லாந்தின் முன்னணி நிறுவனமான பி.ஏ.எம்.பி நிறுவனத் துடன் கடவுள் லட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி நாணயங் களை வெளியிட்டுள்ளது. இந்த தங்க நாணயங் கள் 24 காரட் தூய்மை வாய்ந்ததாக உள்ளன. இந்த நாணயங்கள் சதுரம், ஓவல், வட்டம் ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. குறைந்த பட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 100 கிராம் வரை இந்த நாணயங்கள் கிடைக்கின்றன. வெள்ளி நாணயங்கள் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 1,000 கிராம் வரை கிடைக்கிறது. இந்த நாணயங்கள் மற்றும் பார்கள் திரும்பப் பெறும் உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிரா முதல்வர் அறிமுகம் செய்துள்ள பெஸ்ட் கார்டு...

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பெஸ்ட் என்ற பெயரில் தேசிய பொது இயக்க அட்டையை அறிமுகம் செய்துள்ளார். இந்த அட்டையைப் பயன்படுத்தி மும்பை, டெல்லி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். மின்சாரக் கட்டணம், வீட்டு வரி போன்ற மகாராஷ்டிரா அரசின் பொதுப் பயன்பாடு களுக்கு சுலபமாகப் பயன்படுத்த முடியும். இந்த அட்டை ரூபே கார்டுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி இந்த அட்டையைப் பெறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism