Published:Updated:

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு உதவும் பென்ஷன் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு உதவும் பென்ஷன் திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கேரன்டீட் பென்ஷன் பிளான் ஃபிளெக்சி (ICICI Prudential Guaranteed Pension Plan Flexi)

நிம்மதியான ஓய்வுக்கால வாழ்க்கைக்கு உதவிடும் புதிய பென்ஷன் திட்டத்தை ஐ.சி. ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகை ஓய்வுக் காலத்தில் ஒருவருக்கு நிச்சயமான வருமானத்தைப் பெற்றுத்தரும் என இந்த பாலிசி சொல்கிறது.

இந்தத் திட்டம் ஏழு வகைகளில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்பவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத் தில் சேர்பவர்கள் பணி ஓய்வு பெறும்முன் மரணம் அடையும் பட்சத்தில் அவரால் நியமிக்கப்பட்ட பென்ஷன் தொகை நாமினிக் குக் கிடைக்கும்.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு பென்ஷன் திட்டத்தில் சேர நினைப்பவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிறுவனத்தின் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு உதவும் பென்ஷன் திட்டம்!

மேக்ஸ் லைஃப் ஃபிளெக்சி பெல்ட் அட்வான்டேஜ் பிளான்

மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் புதிய யூனிட் லிங்க்டு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஓய்வுக் காலத்தின்போது ஆயுள் முழுமைக் கும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. பிரீமியம் தொகையிலிருந்து 1.5 மடங்கிலிருந்து 15 மடங்குவரை இந்தத் திட்டத்தில் காப்பீடு கிடைக்கும். ஐந்து முதலீட்டு கலவைகளில் 12 வகையான திட்டங்கள் நிர்வகிக்கப் படுகின்றன.

முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக் கேற்ப அவர்கள் விரும்பும் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இலவசமாக மாறிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

பேகிராப்ட் சொல்யூஷன்: கார்ப்பரேட் பிரீபெய்ட் டிரான்சிட் கார்டு (Corporate Prepaid Transit Card)

பேகிராப்ட் சொல்யூஷன் நிறுவனம் கார்ப் பரேட் நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் புதிய பிரீபெய்ட் அட்டையை அறிமுகம் செய்யவிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனச் செலவினங்களுக்காக இந்த அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிமையாகப் பணப் பரிவர்த்தனைகளைக் கையாளவும், கண்காணிக்கவும் முடியும். இன்னும் மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு இந்த அட்டையை வழங்குவது நமது நிறுவனத்தின் இலக்காக கூறியுள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மெஷின்களில் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism