Published:Updated:

விமானத்தில் பறக்க புதிய கடன் அட்டை..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

விமானத்தில் பறக்க புதிய கடன் அட்டை..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான திட்டங் களில் சிலவற்றைப் பார்ப்போம்.

பஜாஜ் அலையன்ஸ்: புதிய யூலிப் பாலிசி

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (Bajaj Alianz Flexi Cap Fund) என்கிற புதிய யூலிப் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப் படுகிறது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

விமானத்தில் பறக்க புதிய கடன் அட்டை..!

பி.என்.பி மெட்லைஃப் டென்டல் கேர் பிளான்

பி.என்.பி மெட்லைஃப் காப்பீட்டு நிறுவனம் பற்களுக்கான சிகிச்சைக்கு உதவிடும் காப்பீட் டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் நமது நாட்டில் முதல் முறையாக வெளிநோயாளியாகப் பற்களுக்குச் சிகிச்சை எடுக்கும்போதும் காப்பீட்டு நன்மை யைப் பெற முடியும்.

அலைடு மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் எடுத்துள்ள சர்வேயில், நமது நாட்டில் பற்களுக் கான காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு 2030-ம் ஆண்டு 3.65 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக நமது நாட்டில் உள்ள 340 பல் மருத்துவமனைகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. வெளிநாடுகளில் பற்களுக்கான பிரத்யேக காப்பீடு என்பது அதிக அளவில் எடுக்கப்படுகிறது. பிரத்யேக பல் காப்பீடு தேவைப்படுபவர்கள் பி.என்.பி மெட்லைஃப் நிறுவனத்தின் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்

தீ மற்றும் அதைச் சார்ந்த அபாயங்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதி

ஜனவரி மாதம், தீ மற்றும் அதைச் சார்ந்த அபாயங்களுக்கான மூன்று மாதிரி திட்டங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிமுகம் செய்து இருந்தது. வீட்டுக்கான பாதுகாப்பு (பாரத் கிரக ரக்‌ஷா), குறு நிறுவனங்களுக்கான பாதுகாப்பு (பாரத் சூட்சும உதயம் சுரக்‌ஷா) மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பாதுகாப்பு (பாரத் லகு உதயம் சுரக்‌ஷா) ஆகியவை அந்தத் திட்டங் களாகும். இந்தத் திட்டங்களை மாதிரியாகக் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் வீடு மற்றும் நிறுவனங்களுக்கு தீ மற்றும் அதற்கு இணையான அபாயங்களிலிருந்து காப்பீடு வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தற்போது அனுமதி அளித்துள்ளது.

இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை யைக் காப்பீட்டு நிறுவனங்கள் அபாயத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் குறைந்த செலவில் காப்பீடு எடுத்துக்கொள்ளும் வசதி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஸ்பைஸ்ஜெட்... புதிய கடன் அட்டை

விமான சேவை வழங்கும் முன்னணி நிறுவனம் ஸ்பைஸ்ஜெட், ஆக்ஸிஸ் பேங்க் உடன் இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். மேலும், விமான நிலையத்தில் லவுஞ்ச் வசதி, விமானத்தில் இலவச உணவு, டிக்கெட்டுகளை அப்கிரேட் செய்யும் வசதி போன்ற பல சலுகைகள் கிடைக்கும்.

தற்போது மக்கள் அதிக அளவு சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளதால், தமது வாடிக்கை யாளர்களுக்குப் பயனளிக்கும் இந்தக் கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.