Published:Updated:

8% வரை வட்டி வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

8% வரை வட்டி வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

முத்தூட் ஃ பைனான்ஸ்: - என்.சி.டி திட்டம்...

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்கு களாக மாற்றிக்கொள்ள முடியாத 300 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப கால அளவு, வட்டி விகிதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழு வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு பத்திரத்தின் விலை ரூ.1,000 ஆகும்.

இந்த முதலீட்டுக்கு 7.25% - 8% வரை வட்டி கிடைக்கும். பிற திட்டங்களைவிட இந்தத் திட்டத்துக்குக் கூடுதலாக 0.25% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக அதிக பட்சமாக ஏழு ஆண்டுகள் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி தேதி ஜூன் 17 ஆகும். வங்கி டெபாசிட் முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டியைவிட கூடுதலாக லாபம் கிடைக்க இந்த புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

8% வரை வட்டி வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!

பி.ஓ.பி ஃபைனான்ஷியல், ஹெச்.பி.சி.எல் ரூபே கடன் அட்டை

பி.ஓ.பி (BOB) ஃபைனான்ஷியல் மற்றும் ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவனம் இணைந்து அறிமுகம் செய்துள்ளஇந்தப் புதிய கடன் அட்டையைப் பயன்படுத்தி ஹெச்.பி.சி.எல் பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பும்போது கூடுதல் ரிவார்டு பாயின்ட்டுகள் கிடைக்கும்.

மேலும், பயன்பாட்டைப் பொறுத்து வாடிக்கையாளர் களுக்கு போனஸ் தொகையும் கிடைக்கும். மேலும், இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி அனைத்து பொருள்களையும் வாங்க முடியும். அதிகமான தொகை எரிபொருளுக்காகச் செலவு செய்பவர்கள், இந்தப் புதிய கடன் அட்டையை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரீட்டாலோ பார்மா வழங்கும் புதிய கடன் அட்டை

ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது மருந்தகங்களுக்கு மொத்த விலையில் மருந்துகளை விநியோகிக்கும் முன்னணி நிறுவனமான ரீட்டாலோ (Retailio) நிறுவனத்துடன் இணைந்து புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது ரீட்டாலோ நிறுவனத்திடம் 1.5 லட்சம் சில்லறை மருந்துக்கடைகள் மருந்துகளை வாங்கி வருகின்றனர். மேலும், இந்த மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இதுபோன்ற மருந்துக்கடை நடத்துபவர்களுக்கும், பிற வேதி யாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் புதிய கடன் அட்டை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்தப் புதிய கடன் அட்டையைப் பயன்படுத்து வதன் மூலம் 50 நாள்கள் வரை வட்டி இல்லாமல் பொருள் களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ரிவார்டு பாயின்டுகள் போன்ற பல சலுகைகள் இந்த அட்டையைப் பயன்படுத்தும் போது கிடைக்கும்.

நம்ம மெட்ரோ பெங்களூரு அறிமுகப்படுத்தும் புதிய வசதி...

பெங்களூருவின் நம்ம மெட்ரோ தமது மெட்ரோ நிலையங்களில் பயணிக்கும் வாடிக்கையாளரின் முக அங்கீகாரத்தை (Facial Recognition) அடிப்படையாக வைத்து பயனாளர் அட்டை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. இதற்காக தகவல் தொழில்நுட்பத் துறை யில் முன்னணி நிறுவனமான கூகுளுடன் இணைந்துள்ளது.

தற்போது வழங்கப்படும் மாதாந்தர அட்டைகளைப் பயன்படுத்தி பயனாளர் இல்லாத மற்றொரு நபர் பயணம் செய்யும்போது பெரும்பாலான சமயங்களில் அதைத் தடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மெட்ரோ நிறுவனத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. தற்போது பயனா ளர்களின் முக அங்கீகாரத்தைக் கொண்டு பயண அனுமதி வழங்கப்படும்போது இது போன்ற தவறுகள் தடுக்கப்படும்.

தற்போது இந்தப் புதிய வசதி அறிமுகப் படுத்தும்போது இதுபோன்ற அட்டைகளை தவறுதலாக மற்றொருவர் பயன்படுத்த முடியாது. இது மெட்ரோ நிறுவனங்களுக்கு அதிக வருமானத்தைப் பெற்றுதரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி சென்னை மெட்ரோவிலும் அறிமுகப்படுத்தப்படுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாகச் சென்ற மாதத்தில் சுற்றுலா வருபவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாள் மற்றும் மூன்று நாள் பயனாளர் அட்டை அறிமுகம் சென்னை மெட்ரோவில் செய்யப் பட்டுள்ளது.

இந்த அட்டையைப் பயன்படுத்தி நகரில் உள்ள எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் மற்றொரு மெட்ரோ நிலையத்துக்குச் செல்ல முடியும். ஒருநாள் பயனாளர் அட்டை 200 ரூபாய்க்கும் மூன்று நாள் பயனாளர் அட்டை 400 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது!

8% வரை வட்டி வருமானம்... புதிய என்.சி.டி திட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism